24 மணி நேரத்தில் 3526 பரோட்டா : இதுவும் சாதனைதான் (வீடியோ)

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பரோட்டா மாஸ்டர் ஒருவர் ஒரு நாளில் 3526 பரோட்டாக்களை தயாரித்து சாதனை படைத்துள்ளார். 

நெல்லை மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள மேலகரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் கடந்த 13 வருடங்களாக பல ஹோட்டல்களில் பரோட்டா மாஸ்டராக பணிபுரிந்தவர். 

வெகு விரைவாக பரோட்டா மாவு பிசைந்து சுட்டு எடுக்கும் இவரின் திறமையை பார்த்த இவரின் நண்பர்கள், இதையே ஒரு சாதனையாக செய்யலாமே என ஐடியா கொடுக்க, அதை முடித்து காட்டி பலரின் பாராட்டை பெற்றுள்ளார் ராஜேந்திரன்.

தற்போது அவர் தென்காசியில் உள்ள ஸ்ரீபாலாஜி பவன் எனும் ஹோட்டலில் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார்.  அங்கேயே சாதனை செய்வது என முடிவெடுக்கப்பட்டது. 200 கிலோ மைதா மாவை வைத்துக்கொண்டு, பரோட்டா தயாரிக்க ஆரம்பித்த அவர், தொடர்ச்சியாக 24 மணி நேரம் நின்ற படியே மொத்தம் 3526 பரோட்டாக்களை சுட்டு தள்ளினார். அவரின் சாதனை வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அவருக்கு பாராட்டும், பத்திரமும் அளிக்கப்பட்டது.

நன்றி - விகடன்