யாழ்.சின்னக்கடை பகுதியில் திறந்த வெளியில் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகள்

யாழ் குருநகர் சின்னக்கடை மீன் சந்தை தொகுதியில் உள்ள மாட்டிறைச்சி கடைகளின் மாமிச கழிவுகளை சந்தை தொகுதிக்கு முன்னால் உள்ள திறந்தவெளியில் கொட்டுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

சந்தை தொகுதிக்கு முன்னால் உள்ள திறந்தவெளியில் இறைச்சிக் கழிவுகளை கொட்டுவதால் சந்தைக்கு வருபவர்கள்ர் நாற்றத்தை சகித்துக் கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் நாய் பூனை போன்ற விலங்குகள் இறைச்சிகழிவுகளை வீதிகளில் வைத்து உண்கின்றன. பின்னர் அவை அப்புறப்படுத்தாததால் துர்நாற்றம் வீசுகிறது.

மேலும் இறைச்சிக் கழிவுகளை உண்பதற்காக நாய்கள் வெறித்தனமாக ஒன்றை ஒன்று தாக்குவதால் சந்தைக்கு வரும் மக்களையும் நாய்கள் கடித்துவிடக்கூடிய அபாயமும் இருப்பதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்