மாட்டு வண்டி ஓட்டும் மஹிந்த, சிங்கள எம். ஜி. ஆராக மாறும் திட்டம்!

சிங்களவர்களின் மக்கள் திலகம் என்கிற உயரிய கௌரவத்தையும், இதன் மூலமாக அரசியலில் மீளெழுச்சியையும் அடைகின்ற பகீரத முயற்சியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஈடுபட்டு உள்ளார்.

மக்கள் திலகம் எம். ஜி. ஆர் பாணியை பின்பற்றுவதன் மூலம் இவர் இலகுவாக சிங்களவர்களின் குறிப்பாக கிராமபுற மக்களின் மனங்களை வெல்ல முடியும் என்று முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இவருக்கு ஆலோசனை வழங்கி இருக்கின்றார்.

மட்டும் அல்லாமல் எம். ஜி. ஆர் நடித்த ரிக்ஸாகாரன், விவசாயி போன்ற தமிழ் படங்களை இவருக்கு காண்பித்தும் உள்ளார்.

தொண்டமான் கொடுத்த ஐடியாவை மஹிந்தவின் மந்திராலோசனை குழுவினர் பெரிதும் பாராட்டி ஏற்று கொண்டனர்.

மஹிந்த ராஜபக்ஸவை சிங்களவர்களின் எம். ஜி. ஆராக மாற்றுவதற்காக இவர் முன்பு நடித்து இருந்த சில படங்களை தூசி தட்டினர்.

அப்போது ஒரு படத்தில் இவர் மாட்டு வண்டிகாரனாக நடித்து இருந்த காட்சி பிடித்து போக இதை சமூக இணைப்பு தளங்கள் மூலம் அதீத பிரசித்தி அடைய வைக்கின்ற முயற்சியில் குதித்து உள்ளனர்.