வடமாகாண சுகாதார அமைச்சருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

வடமாகாண சுகாதார அமைச்சருக்கு எதிராக வவுனியா கந்தசுவாமி ஆலய வளாகத்தில் இன்று (11) காலை காணாமல் போனோ ரின் உறவினர்கள் சுமார் ஒருமணித்தியாலங்களுக்கு மேல் . கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பாக வவுனியாவில் காணாமல் போனோரின் உறவினர்களினால் அடையாள உண்ணாவிரத போரா ட்டமொன்று இடம்பெற்றது. இதன் போது காணாமல் போனோரின் உறவினர்களினால் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனின் புகை ப்படம் எரிக்கப்பட்டது.

இச்செயலை வடமாகாண சுகாதார அமைச்சர் உண்ணாவிரதம் இருந்தவர்கள் விசமிகள் என தெரிவித்தமையால் இன்று அமைச்ச ருக்கு எதிராக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

“புலம்பெயர் தமிழர்களே காசு கறக்க கனடா வரும் அமைச்சரிடம் ஜாக்கிரதை” ,“சம்பந்தன் தீர்வு குழந்தையைப் பெற கஸ்டப்ப டுகிறார். டாக்டர் நீ போய் வைத்தியம் பார்த்து விடு“ , “செத்த பிணங்கள் எங்களை பார்த்து விசமிகள் என்று கூறுவதா?”, என பல்வேறு பாதாதைகளை தாங்கிய வண்ணம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ் விடயம் தொடர்பாக வடமாகாண சுகாதார அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் தெரிவிக்கையில்

அமைச்சர் தற்போது வெளிநாட்டிக்கு சென்றுள்ளார் .அவர் மீண்டும் இலங்கை வந்ததன் பின்னர் கருத்து தெரிவிப்பதாக தெரிவி த்தார்.