குழந்தைகள், கர்ப்பிணிகள், வயதானவர்களுக்கு இலங்கையில் முக்கிய எச்சரிக்கை

நாட்டில் தற்போது நிலவும் கடுமையான குளிர் காலநிலையால் புதிதாக பிறந்த குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் வயதானவர்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகலாம் எனவும் கடுமையான குளிரால் குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு சுவாசிப்பதில் பிரச்சினை காணப்படுமாயின் உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லுமாறும் குடும்ப சுகாதார பணியகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

குடும்ப உறுப்பினர்கள் தமது குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களை இந்த கடுமையான குளிர் காலநிலையிலிருந்து சரியான முறையில் பாதுகாத்து கொள்ள வேண்டும் என்பதோடு காலநிலைக்கு ஏற்ற உடைகளையும் உணவுகளையும் வழங்க வேண்டும் எனவும் குடும்ப சுகாதார பணியகம் கோரிக்கை விடுத்துள்ளது.