வட மாகாண பாடசாலை மாணவர்களின் கவனத்திற்கு!

வட மாகாணத்தில் உள்ள  சகல பாடசாலைகளும்  எதிர்வரும் வெள்ளிக்கிழமை (13) மூடப்படும் என வட மாகாணக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை தினத்துக்குப் பதிலாக எதிர்வரும் 21 ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலை நடைபெறும் என வட மாகாண கல்வி அமைச்சரின் செயலாளர் இ.இரவீந்திரன் தெரிவித்துள்ளார்.