பளையை சேர்ந்த மகளால் தினமும் தந்தை உயிருடன் கொலை!

இன்றைய வட மாகாணத்தில் பிள்ளைகள் எவ்வளவு தூரம் பெற்றோரை கனம் பண்ணுகின்றனர்? என்பதை காட்ட கூடிய நிஜ பதிவு இது.

கிளிநொச்சியில் பளையை சேர்ந்த மகள் ஒருவர் வயோதிப தகப்பனை இப்படி நடத்துகின்றார்.

அரசாங்கம் கொடுத்த காணி, நிறுவனம் கொடுத்த 785000 ரூபாய் வீடும், மலசலகூடமும், ஐ. எம். ஓ நிறுவனம் கொடுத்த வாழ்வாதார திட்டம், ஜன் நிறுவனம் கொடுத்த விவசாய கிணறு ஆகியவற்றின் வரங்களை அனுபவிப்பவர் இந்த மகள்.

இரண்டு அறை, விறாந்தை, சமையலறை ஆகிய வசதிகளை கொண்ட வீட்டில் இவருக்கு அப்பாவை தங்க வைக்க சிறிய இடம் இல்லை போலும்?

இதனால் மலசலகூட வாசலுக்கு அருகில், கோழி கூட்டுக்கு பக்கத்தில், குப்பை கொட்டும் கிடங்குக்கு அண்மையில் அரைகுறை குடிசை ஒன்றில் தங்க வைத்து உள்ளார்.

பகலில் சுட்டெரிக்கும் வெயிலிலும், இரவில் நடுங்க வைக்கும் குளிரிலும் தினம் செத்து கொண்டிருக்கின்றார் இந்த தகப்பன்.