யாழ்ப்பாண அரசன் என்ன செய்கின்றார்? (வீடியோ இணைப்பு)

யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த ஆரிய சக்கரவர்த்திகள் வம்சத்தில் வந்தவர் என்று சங்கிலிய மன்னனின் வாரிசு என்றும் யாழ்ப்பாண அரசர் என்றும் சுயம் பிரகடனம் செய்தவர் ராஜா ரெமிஜியஸ் கனகராஜா.

நாட்டில் நிலவிய யுத்த சூழல், அமைதியீனம் ஆகியவற்றின் காரணமாக நெதர்லாந்தில் புகலிடம் பெற்றார்.

ஆயினும் இவர் போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு யாழ்ப்பாண அரசன் என்று என்ன செய்தார்? என்று பார்த்தால் பண்டிகை தினங்களில் வாழ்த்து செய்திகள் வெளியிடுகிறார். புலம்பெயர் தமிழ் பிரமுகர்களின் வைபவங்களில் சில வேளை பிரமுகராக பங்கேற்கின்றார். தமிழ் ஊடகங்களுக்கு பேட்டி வழங்குகின்றார்.

ஆயினும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஏதேனும் சிறிய நிவாரண உதவிகள் வழங்கி இருக்கின்றாரா? என்று பார்த்தால்கூட எதுவும் கிடையாது.

இவர் இப்போது சொந்த கதையை, சோக கதையை வீடியோவாக்கி யூரியூப்பில் பதிவேற்றி உள்ளார்.

இதற்கு நாடு கடந்த யாழ். அரசனின் கதை என்று பெயரிட்டு உள்ளார்.