12 வயதுச் சிறுமியை பாலியல் கொடுமைக்குள்ளாக்கிய தந்தை சுன்னாகம் பொலிசாரால் கைது

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 12 வயதுச் சிறுமியை பாலியல்ரீதியான கொடுமைகளுக்கு உள்ளாக்கிய 36 வயதுத் தந்தையைப் பொலிசார் கைது செய்துள்ளனர்.

நீண்ட காலமாக தனது தந்தையால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி வந்த சிறுமி பயம் காரணமாக அதனை வெளியே சொல்லவில்லை எனத் தெரியவருகின்றது. பின்னர் தனது பெரியதாயாரிடம் இது தொடர்பாக சிறுமி முறையிட்டதைத் தொடர்ந்து பெரியதாயாரால் சுன்னாகம் பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் தந்தையைக் கைது செய்துள்ளனர். சிறுமி உடற்பரிசோதனைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.