சாகசத்தில் ஈடுபட்ட பிரபுதேவா அநியாயமாக மரணம்

பிரபு தேவா… பதுளையில் பசறையை சேர்ந்த சிறுவன் ஆவார். இவரின் ஊரில் உள்ள பிள்ளையார் கோவிலில் அண்மையில் வருடாந்த திருவிழா இடம்பெற்றது.

திருவிழாவில் பங்கேற்று ஆஞ்சநேயர் வேடம் போட வேண்டும் என்பது இவரின் நெடுநாள் ஆசை அன்றுதான் நிறைவேறியது. ஆயினும் ஆஞ்சநேயராக மாறி மரத்துக்கு மரம் தாவியபோது இவர் அநியாயமாக விழுந்து இறந்து போனார்.