பிரபாகரனின் விந்தில் இருந்து பிள்ளை பெற விரும்பும் சிங்கள பெண்கள்!

விடுதலை புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் விந்தில் இருந்து குழந்தை பெற சிங்கள பெண் விரும்புகின்றார் என்கிற செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாட்டின் தலை சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் உபுல் சாந்த சனஸ்கல. இவரின் அண்மைய நாவல் நானும் பல ஆண்களும் என்பது.

இதில் வருகின்ற பெண் பாத்திரம் ஒன்று குழந்தை பேறு பெற பகீரத முயற்சி எடுக்கின்றது. பிரபாகரனின் விந்தில் இருந்து ஒரு குழந்தையை பெற விரும்புவதாக இப்பாத்திரம் கூறுகின்றது.

இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடி என்கிற வகையில் இது யதார்த்தத்தில் உண்மையிலேயே பல சிங்கள பெண்களின் விருப்பத்தை பிரதிபலிக்கின்றது என்று கூறப்படுகின்றது.

இந்நிலையில் இப்பாத்திரமும், இப்பாத்திரத்தை உருவாக்கிய எழுத்தாளர் சனஸ்கலவும் அதீத பிரசித்தியை தென்னிலங்கையில் அடைந்துள்ளதுடன் பயங்கர விமர்சனத்துக்கும் உள்ளாகி உள்ளனர்.