இலங்கையில் இருந்து இனி நேரடியாகவே இந்தியாவை காணலாம். அதிசயம் ஆனால் உண்மை!

இலங்கையில் இருந்துக்கொண்டு இந்தியாவை பார்ப்பது சாத்தியமற்ற விடயம்தான். பலரும் கணினி அல்லது வலைதளங்கள் ஊடாக பார்க்கலாம் என்ற எண்ணப்பாட்டிற்குதான் வந்திருப்பீர்கள். ஆனால் நேரடியாக பார்க்க முடியும் என்றால் நம்ப முடியுமா? நம்பிதான் ஆக வேண்டும்.

அதற்காகவே உருவாக்கப்படும் பிரமிக்கத்தக்க இலங்கையின் தற்போதைய உயரமான கட்டிடம்தான் இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தாமரைக் கோபுரம்( லோட்டஸ் டவர்).

தென்னாசியாவிலே மிக உயரமான பல் தொழிற்பாட்டு தொலைத் தொடர்புக் கோபுரமாக அமைய பெற வேண்டும் என்ற நோக்கில் 2012 ஆம் ஆண்டு இதன் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

நான்கு தட்டு மேடைகளையும், 350 மீட்டர் உயரமும் கொண்ட கோபுரமானது கொழும்பில் 3.06 ஹெக்டேயர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.

மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் கட்டிடக்கலை பீடத்திலிருந்து இக்கோபுர நிர்மாணிப்புக்கான தொழில்நுட்ப உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், இக்கட்டடத்திற்காக இலங்கை தொலைத்தொடர்பு ஆணையத்தால் 104.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டிருப்பது விசேட அம்சமாகும்

93 அடுக்குகளை கொண்டதாக உருவாகி வரும் குறித்த கட்டிடம் ஆசியாவின் மிக உயர்ந்த கட்டிடமாக இடம்பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்படுகின்றது.

மேல் தளத்தில் 5 நட்சத்திர விடுதிகள் மூன்றும் 23 ஹொட்டல்களை கொண்டதுமாக உருவாகி வருகிறது.

குறித்த தளமானது சுழலும் விருந்தினர் மண்டபமாகவும் அமையவுள்ளது.

விசாலமான அறைகள், வரவேற்பு மண்டபம், திருமண மண்டபம், பல் பொருள் அங்காடி என்பவற்றை கொண்டதுமாக இக்கட்டடம் உருவாக்கப்படவுள்ளது.

இவற்றையெல்லாம் விட உயரத்தில் இருந்து பார்க்கும் போது கொழும்பு நகர் உட்பட குறிப்பிட்ட சில நகரங்களும் இந்தியாவையும் காண கூடிய வகையில் தாமரைக்கோபுரம் உருவாக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.