ஆபிரிக்க நாடு ஒன்றில் இருந்து புலிகளின் விமானம் முதன் முறையாக வன்னி வந்த வேளை

விடுதலைப் புலிகள் பலமாக இருந்த கால கட்டத்தில் சிலின் 143 என்ற இலகு ரக வானூர்திகளை அவர்கள் கொள்வனவு செய்து. அதனை வன்னிக்கு தருவித்து இருந்தார்கள்.

இந்த விமானங்கள் இரண்டும், முதன் முறையாக வன்னி நிலப்பரப்பை எட்டியவேளை எடுக்கப்பட்ட அரிய புகைப்படங்கள் தான் இவை.

பின்னர் அவற்றை புலிகள் தாக்குதலுக்காக போர் விமானங்களாக மாற்றி, குண்டுகளை சுமந்து சென்று தாக்கும் விதத்தில் வடிவமைத்தார்கள். கமபிளக் எனப்படும் வரி நிறம் பூசப்பட்டு தாக்குதலுக்கு தயாரானது.

பின்னர் சில முக்கிய விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வன்னிக்குள் கொண்டுவர இவர்கள், சில முறை இந்த விமானத்தை பயன்படுத்தி நடுக் கடலில் நின்ற தமது கப்பலில் இருந்து ஆயுதங்களையும் தருவித்தார்கள்.

இதனை இவர்கள் எவ்வாறு கடலில் இறக்கி ஏற்றினார்கள் என்பது இதுவரை புரியாத புதிர் தான். கடல் விமானத்தை போல வடிவமைத்து. பின்னர் அதனை தாக்குதல் விமானமாக மாற்றியிருக்கவேண்டும் என்று கூறப்படுகிறது.

தென்னிலங்கையில் சுமார் 7 முறை பறப்பில் ஈடுபட்டு தாக்குதல் நடத்தி வெற்றிகரமாக வன்னி திரும்பிய இவ் விமானங்கள், உலகின் முதல் முதல் விடுதலைப் போராட்ட இயக்கம் ஒன்றின் வான்படை என்ற புகழைப் பெற்றது.

பறப்பில் ஈடுபட்டிருக்கும் விமானங்களை விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், பொட்டுஅம்மான், பிரிகேடியர் தமிழ்ச்செல்வன், கேணல் ஜெயம், கேணல் விதுஷா, காஸ்ரோ, கேணல் தீபன் ஆகியோர் பார்வையிடுவதையும், பொட்டுஅம்மான், தமிழ்ச்செல்வன் இருவரும் விமானத்தில் மகிழ்ச்சியோடு பயணிப்பதையும் காணலாம்.

நன்றி இணையம்