மட்டக்களப்பு மந்திரத்தால் பெட்டைகளை மடக்கும் யாழ். இளைஞர்கள்!

இப்போது நவநாகரிக காலம். எதிலும் அவசரம். எங்கும் அவசரம். யாழ்ப்பாணத்திலும் இதே நிலைவரம்தான். காதலிக்ககூட யாழ்ப்பாண இளைஞர்களுக்கு இப்போது நேரம் இல்லை.காதலுக்கு காத்திருப்பும், தவிப்பும் அவசியம் என்று இருந்த நிலை பெரும்பாலும் மலையேறி விட்டது.

மட்டக்களப்புக்கு ஆண் பிள்ளைகளை அனுப்ப யாழ்ப்பாண பெற்றோர் பயந்த ஒரு காலம் இருந்தது. மந்திரத்தால் பாயோடு ஒட்ட வைத்து விடுவார்கள் என்று பயம் கலந்த நம்பிக்கை. மட்டக்களப்பாரின் விருந்துபசாரத்தில் ஆண் பிள்ளைகள் மயங்கி அங்கேயே தங்கி விடுவார்கள், மற்றும்படி செப்படி வித்தை எதுவும் இல்லை என்று சொல்பவர்களும் உள்ளனர்.

ஆனால் இன்று யாழ்ப்பாண இளைஞர்கள் பலரும் அமைதி சூழலில் மட்டக்களப்புக்கு சென்று வருகின்றனர். எதற்கு தெரியுமா? மந்திரத்தால் மாங்காயை விழுத்தலாமோ இல்லையோ காதலியை மடக்கலாம் என்று விசுவாசிக்கின்றனர். இதற்காக மட்டக்களப்பு மந்திரவாதிகளை நாடி வருகின்றனர்.

புலம்பெயர் தேசத்தில் உள்ள உறவுகள் இவர்களுக்கு அனுப்புகின்ற பணத்தையே பெரும்பாலும் மூலதனம் ஆக்குகின்றனர். மந்திரவாதி மடை வைத்து பூசை செய்து வசிய மந்திரம் ஓதி கொடுப்பார். இதற்கு குறைந்த பட்சம் 30000 ரூபாய் வரை செலவாகும். எந்த பெண்ணை வசியம் செய்ய வேண்டுமோ அந்த பெண்ணின் பெயர், புகைப்படம் ஆகியன இம்மந்திர பூசைக்கு முக்கியம். பூசையின் பலனாக பெண் இளைஞனுக்கு பின்னால் சுற்றி திரிவாராம்.

மோகினி மந்திர பாடல் வருமாறு: -

ஓம் சிங்கி மோகினி ஓம் சிங்கார மோகினி

ஆடிவா மோகினி அலங்கார மோகினி

தாக்கு தாக்கு …….. சென்றடைந்து தாக்கு

நாலு கால் நாய் சுற்றுவது போல் என் காலடியில் வந்து சுற்ற வைக்கவே

நமாய சுவாய சுவாய சுவாய சுஃப்

வெற்றிடம் விடப்பட்டு உள்ள இடத்தில் பெண்ணின் பெயரை சேர்த்து வைத்து இம்மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். ஆயினும் குருவருளுடன் ஓதினாலே மந்திரம் சித்திக்கும், இல்லையேல் விபரீதம் நேரலாம் என்று எச்சரிக்கை செய்கின்றனர்.

யாழ்ப்பாணத்தில் பல ஆண்களும் படுக்கை அறைக்குள் இம்மந்திரத்தை இரகசியமாக ஓதி வருகின்றனர்.