யாழ் ஸ்கந்தவரோதயா கல்லுாரி மாணவன் தொழில்நுட்ப பாட பிரிவில் தேசியமட்டத்தில் முதலாம் இடம்

 அகில இலங்கை ரீதியாக பொறியியல் தொழில்நுட்ப பாடத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். குறித்த மாணவன் யாழ்ப்பாணம் ஸ்கந்தராவய கல்லூரியில் கல்வி கற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2016 கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சையின் 

பொறியியல் தொழிநுட்பவியல் பாடப்பிரிவில் அகில இலங்கை ரீதியில் சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரி மாணவரான கனகசுந்தரம் ஜதுர்சஜான் முதலிடம் பெற்றுள்ளார்.


உயிர் தொழிநுட்பவியல் பாடப்பிரிவில் ஓட்டமாவடி மத்திய மகா வித்தியாலயத்தின் இல்யாஸ் பாத்திமா அரோச மூன்றாமிடத்தை பெற்றுள்ளார்.

இதேவேளை உயிரியல் பிரிவில் கிண்ணியா மத்திய மகா வித்தியால மாணவன் எம். ரோஷேன் அக்தார் இரண்டாமிடம் பெற்றுள்ளதுடன், கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரியின் க்லேரின் திலுஜான் உயிரியல் பிரிவில் அகில இலங்கை ரீதியில் மூன்றாமிடத்தை பெற்றுள்ளார்.

கலைப்பிரிவில் மானிப்பாய் இந்துகல்லூரியின் பத்மநாதன் குருபரேஷான் இரண்டாமிடத்தை பிடித்துள்ளார்.