2016 க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகின

2016ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. இலங்கை பரீட்கைள் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.


இந்நிலையில், www.doenets.lk என்ற இணையத்தளம் ஊடாக பெறுபேறுகளை பார்வையிட முடியும் என பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, 2016ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ஆம் திகதி ஆரம்பமாகி 27ஆம் திகதி வரை இடம்பெற்றது.

2016ஆம் ஆண்டு உயர் தரப்பரீட்சையில் 3 இலட்சத்து 15 ஆயிரத்து 605 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர். இவர்களில் 2 இலட்சத்து 40 ஆயிரத்து 991 பேர் பாடசாலை பரீட்சார்த்திகளும், 74 ஆயிரத்து 614 தனியார் பரீட்சார்த்திகளும் பரீட்சைக்கு தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.