கணவன் கட்டிய சீட்டுக் காசுடன் கணவனின் தம்பியும் ஓட்டம் பிடித்தார் மனைவி

யாழ் புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரின் மனைவி வர்த்தகரின் பெருமளவான பணம் மற்றும் நகைகளுடனும் வர்த்தகர் கட்டிய 5 லட்சம் ரூபா சீட்டுக்காசுடனும் வர்த்தகரின் தம்பியுடன் மாயமாகியுள்ளார். இது தொடர்பாக வர்த்தகர் பொலிசாரிடம் முறையிடுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

தனது தம்பியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட வர்த்தகர் ‘தனது பணம் மற்றும் நகைகளை ஒப்படைத்துவிட்டு அவளைக் கொண்டு எங்கு வேண்டுமானாலும் செல்‘  என்று கூறியதாகவும் அதற்கு வர்த்தகரின் தம்பி உடன்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. 

இரு பிள்ளைகளுக்கு தாயான குறித்த வர்த்தகரின் மனைவியை பிள்ளைகள் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது அவர்களை ஏசி விட்டு தொடர்பைத் துண்டித்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக வர்த்தகரின் சகோதரியும் வர்த்தகரின் மனைவியின் குடும்பத்தினருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இச் சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிசாரிம் முறையிடவுள்ளதாகவும் தெரியவருகின்றது.