யாழில் கொலைச் சந்தேகநபரும் வெட்டுக்குத்து காவாலியுமான ஒருவன் நீதிபதி இளஞ்செழியனால் பிணையில் விடுவிக்கப்பட்டார்

யாழ்ப்பாணம் மாட்டின் வீதியில் இடம்பெற்ற கொலைச்சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபருக்கு பிணை வழங்கி தீர்ப்பளி த்தது யாழ் மேல் நீதிமன்றம்

யாழ்ப்பாணம் மாட்டின் வீதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த நபர் தன்னுடன் தங்கியிருந்த மற்றைய நபரை 2015ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் கொலை செய்தமை தொடர்பில் அவர்யாழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்

இவர் கடந்த வருடம் பிணையில் விடப்பட்ட சமயம் மீண்டும் ஓர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டதாக சுன்னாகம் பொலிஸார் குறி த்த நபரை தேடி வந்துள்ளனர் இந்’நிலையில் சாவகச்சேரி பகுதியில் பிறிதொரு நபரை அடித்து கடும் காயங்களை விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் குறித்த நபருக்கு எதிராக பிறிதோர் வழக்கும் சாவகச்சேரி பொலிஸாரால்’ பதிவு செய்யப்பட்ட நிலையில் குறித்த நபர் மறைந்து வாழ்ந்து வந்துள்ளார்.

இவரின் வழக்கு யாழ் மேல் நீதிமன்றிற்கு மாற்றப்பட்ட நிலையில் இவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டதோடு குறித்த நபர் யாழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

குறித்த நபரின் வழக்கு யாழ் மேல் நீதிமன்றில் நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டபோது குறித்த கொலை வழக்கு தொடர்பிலான

சாட்சிகள் வரவழைக்கப்பட்டதுடன் 6 ஆவது சாட்சி தனது சாட்சியத்தை மன்றில் தெரிவித்தார்.1 ஆம் 5 ஆம் 7 ஆம் சாட்சிகள் மன்றில் ஆஜராகியிருக்கவில்லை .

மேலும் 2 ஆம் 3 ஆம் 4 ஆம் சாட்சிகளின் சாட்சியங்கள் அவசியம் அற்றவையென நீதிபதி தெரிவித்ததுடன் 1 ஆம் 5 ஆம் 7 ஆம் சாட்சிகளுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த நபரை 50 000 ருபாய் சரீரப்பிணையில் விடுவித்ததுடன் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி வழக்கை ஒத்திவைத்தார் நீதிபதி இளஞ்செழியன்.