மருமகளுடன் பாலியல் சேட்டை செய்த பூசகரை கம்பி எண்ண வைத்தார் மாமியார்

 தொண்டமனாறு கெருடாவில் பகுதியில் பூசகர் ஒருவரின் பாலியல் தொல்லை தாங்காது அவரது மருமகள் பொலிசாரிடம் முறையிட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பூசகரின் மகனின் மனைவியான குறித்த இளம் குடும்பப் பெண் கணவன் வெளியே சென்ற பின் தனித்திருக்கும் போது பூசகர் அப் பெண்ணை பாலியல்துஸ்பிரயோகம் செய்வதற்கு முயன்று வந்துள்ளார்.  

 இது தொடர்பாக மருமகள் தனது தாயாரிடம் முறையிட்டுள்ளார். தாயாரும் ஐயரை கடுமையாக எச்சரித்திருந்தார். பின்னரும் ஐயர் தொடர்ச்சியாக பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததால் தாயாரும் மகளுமாக வல்வெட்டித்துறைப் பொலிசாரிடம் முறையிட்டுள்ளனர்.

பொலிசார் மேற் கொண்ட விசாரணைகளின் பின்னர்  48 வயதான ஐயர் கைது செய்யப்பட்டு பருத்தித்துறை நீதிமன்றில் ஆயர்ப்படுத்தப்பட்டார். ஐயரை எதிர்வரும் 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை மாவட்ட பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.