யாழ் வேம்படி உயர்தரப்பாடசாலை அதிபரின் செயலால் மாணவிகள் சீரழியும் நிலை

வேம்படி மகளீர் உயர்தரப்பாடசாலை காலை 7.30 மணி தொடங்கி மாலை 2.30 மணிவரையும் இயங்கி வருவதாக பெற்றோர்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.

வடக்கில் உள்ள ஏனைய பாடசாலைகள் புதிய நடைமுறைக்கு அமைய காலை 7.30 மணி தொடங்கி நண்பகல் 1.30 மணிக்கு முடிவடையும் போது வேம்படி மகளீர் உயர்தரப்பாடசாலை ஒரு மணித்தியாலம் பிந்தியே முடிவடைவதாகத் தெரியவருகின்றது.

இதற்கான காரணம் என்ன என்பது பெரும் மர்மமாக உள்ளதாக தெரியவருகின்றது. விளையாட்டுப் பழகுவதற்காக என அப்பாடசாலையில் உள்ள எல்லா மாணவிகளையும் ஒரு மணித்தியாலம் பிந்தி விடுவதால் பாடசாலை முடிவடைந்த பின்னர் மாணவிகள் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாகும் நடவடிக்கைகள் அதிகரிக்கும் என பெற்றோர்கள் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாடசாலை சேவையில் ஈடுபடும் பேரூந்துகளில் பயணம் செய்யும் மாணவிகள் இருக்கின்றார்கள். குறித்த பேரூந்துகள் ஏனைய பாடசாலை மாணவிகளை ஏற்றிவிட்டு வேம்படி பாடசாலை மாணவிகள் பிந்தி வருவதால் ஏற்றாமல் சென்று விடுவதாகவும் தெரியவருகின்றது.

சில பாடசாலை பேரூந்துகள் மாணவிகளுக்காக காத்திருந்த போதும் ஏனைய பாடசாலை மாணவிகளை ஏற்றி அங்கு ஒரு மணிநேரம் அப் பாடசாலை மாணவிகளையும் பேரூந்துக்குள்  அடைத்து வைத்து கொடுமை புரிவதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

இதே வேளை பாடசாலை பேரூந்துகள் சென்ற பின்னர் வேம்படிப் பாடசாலை மாணவிகள் தனியார் பேரூந்துகளில் ஏறியே வீடு செல்லும் நிலை உருவாகியுள்ளதாகவும் இதனால் மாணவிகள் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் துார இடங்களில் இருந்து வரும் மாணவிகளின் பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர்.

பாடசாலை அதிபரின் இந்த முட்டாள்தனமான நடவடிக்கையால் மாணவிகளின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகியுள்ளதாகவும் பெற்றோர் தரப்பில் தெரிவிக்கிப்படுகின்றது.