வேலைக்கார பெண்ணை குடும்பத்தோடு சேர்ந்து பலாத்காரம் செய்த கொடூரம்!

மகாராஷ்டிராவில் ஒரு வீட்டில் வேலை செய்து வந்த பெண்ணை அந்த வீட்டில் உள்ள ஆண்கள் வரிசையாக ஒருவர் பின் ஒருவராக பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

மகாராஷ்டிராவின் உல்ஹாஷ் நகரில் ஒரு வசதியான குடும்பம் உள்ளது. அவர்கள் கூட்டு குடும்பமாக வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் படித்தவர்கள், பலர் வழக்கறிஞராக உள்ளனர். அங்கு 41 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வீட்டு வேலைகளை செய்து வந்தார்.

இந்நிலையில் அந்த வீட்டில் உள்ள சங்கீத என்ற பெண்ணுக்கு அந்த வேலைக்கார பெண்ணுக்கும் இடையே எதோ வீட்டு வேலை தொடர்பாக சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த சங்கீதா தன் வீட்டில் உள்ள ஆண்களிடம் அந்த வேலைக்கார பெண்ணை கூட்டாக பலாத்காரம் செய்யுங்கள் என கூறியுள்ளார்.

இதனையடுத்து அந்த வீட்டில் உள்ள ஆண்கள் அந்த வேலைக்கார பெண்ணை ஒருவர் பின் ஒருவராக வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் அந்த பெண் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அவர்கள் வழக்கறிஞர்கள் குடும்பம் என்பதால் முதலில் புகாரை வாங்க மறுத்த காவல்துறை பின்னர் அதன் மீது நடவடிக்கை எடுத்து அந்த குடும்பத்தை சேர்ந்த ஒருவரை கைது செய்தும் தலைமறைவாக உள்ள மற்றவர்களை தீவிரமாகவும் தேடி வருகின்றனர்.