போதை மருந்து கொடுத்து 13 வயது சிறுமியை மாறி மாறி பலாத்காரம் செய்த இளைஞர்கள்!

நண்பரின் பிறந்த நாள் விழாவுக்கு சென்ற டெல்லியை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் போதை மருந்து கொடுக்கப்பட்டு இரண்டு நண்பர்களால் மாறி மாறி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தலைநகரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி உத்தம் நகரை சேர்ந்தவர் 13 வயது சிறுமி ஹேமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரை கடந்த 13-ஆம் தேதி இளைஞர் ஒருவர் தனது பிறந்த நாள் விழாவுக்கு வருமாறு அழைத்துள்ளார். அவர் தனது நண்பர் என்பதால் அந்த சிறுமியும் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.

அந்த பிறந்த நாள் விழாவில் சிறுமிக்கு வழங்கப்பட்ட குளிர் பானத்தில் போதை மருந்தை கலந்து கொடுத்துள்ளனர். போதை மருந்து கலந்த குளிர் பானத்தை குடித்த சிறுமி சுயநினைவை இழந்துள்ளார். இதனையடுத்து அவர் சிறுமி மற்றும் தோழி எனவும் பாராமல் பிறந்த நாள் பையன் உட்பட இரண்டு இளைஞர்கள் மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளனர்.

இதனையடுத்து சிறுமியை டெல்லியில் உள்ள மருத்துவமனை வளாகத்தின் அருகில் போட்டுவிட்டு இருவரும் தப்பித்து ஓடியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறை அந்த இரண்டு இளைஞர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.