கருணாநிதி நள்ளிரவில் திடீரென மருத்துவமனையில் அனுமதி

தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கருணாநிதி 15-12-16 அன்று நள்ளிரவு உடல்நலக் குறைவு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில தினங்களுக்கு முன் உடல்நலம் சரியில்லாமல் தனியார் மருத்துவமனையான காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  பின்னர் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்தனர்.

உடல் நிலையில் முன்னேற்றம் பெற்ற கருணாநிதி கடந்த 7ம்தேதி கோபாலபுரத்தில் உள்ள தனது இல்லத்திற்கு சென்றார்.

இந்நிலையில் தற்பொழுது, சுவாசக் கோளாறு, நுரையீரல் பிரச்சனை மற்றும் தொண்டையில் நோய் பாதிப்பு மற்றும் சளித் தொல்லை காரணமாக மீண்டும் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.