புதிய காதலனுடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொலை செய்த பெண்

பவானிசாகர் அருகே புதிய காதலனுடன் சேர்ந்து பழைய கள்ளக்காதலனை கொலை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே உள்ள தொப்பம் பாளையத்தைச் சேர்ந்த செல்வராணி(35) திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது கணவர் திருமணமான சிறிது காலத்திலே இறந்துவிட்டார்.

செல்வராணி வேலை பார்த்த அதே நிறுவனத்தில் வேலை செய்த டிரைவருடன் பழகி அது காதலாக மாறியுள்ளது. இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதற்கிடையே செல்வராணிக்கு வேறொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த செய்தி அந்த டிரைவருக்கு தெரியவந்துள்ளது. இதனால் செல்வராணிக்கும் அவரது முதல் காதலனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதை செல்வராணி, அவரது புதிய காதலனுக்கு தெரிவித்துள்ளார்.

இருவரும் திட்டம் தீட்டி அந்த டிரைவரை கொலை செய்துவிட்டனர். தகவல் அறிந்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், செல்வராணி தனது புதிய காதலுடன் சேர்ந்து பழைய காதலனை சென்றார் என்பதை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து காவல்துறையினர் செல்வராணியை கைது செய்தனர்.