பொலிஸ் நிலைய நம்பர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது எவ்வாறு? ஆதாரம் இணைப்பு

யாழ்ப்பாணத்தில் 077 175 7183 என்ற தொலைபேசி எண்ணிலிருந்து வைபர் மூலம் கப்பம் கோரி மிரட்டல் அழைப்புகள் விடப்பட்டு வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. 

குறித்த தொலைபேசி எண்களிலிருந்தும் பேசுபவர்கள், தம்மை பொலிஸார் என்று கூறியே கப்பம் கேட்டு மிரட்டி வருவதாக பாதிக்கப்பட்டுள்ளவர்கள் நியூஜப்னாவின்  கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர். 

இந்த விடயம் தொடர்பில் மேலும் அறியவருவதாவது, 

077 175 7183 என்ற தொலைபேசி எண்ணிலிருந்து வைபர் ஊடாக கப்பம் கோரி மிரட்டல் விடும் நபர் தான் மிரட்டுவதோடு மட்டுமல்லாமல் அருகிலிருக்கும் இன்னொருவரிடம் போனைக் கொடுத்து, அவர் தன்னை பொலிஸார் எனக் கூறி மிரட்டல் விடும் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த மிரட்டலானது ஒன்றில் பொலிஸ் நிலையத்தில் இருந்தோ அல்லது வெளியில் இருந்தோ மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.   

மிரட்டல் விடுக்கும் குறித்த இலக்கம்  கைபேசி இலக்கமாக உள்ளதே உங்களை பொலிஸார் என எப்படி நம்புவது என பாதிக்கப்பட்டவர்கள் வினவும் போது, உடனே தாங்கள் பொலிஸார் தான் எனவும், இதோ பாருங்கள் எங்களது நிலையான தொலைபேசி இலக்கம் என குறித்த கோப்பாய் பொலிஸ் நிலைய நம்பர் ஒன்றையும்  அனுப்பியுள்ளனர். 

அந்த இலக்கம் வைபர் ஊடாக அனுப்பப்பட்டமை  ஆதாரமாக கீழே இணைக்கப்பட்டுள்ளது. 

மிரட்டும் தரப்பால் கூறப்பட்ட நம்பர்களில் ஒன்று கோப்பாய் பொலிஸ் நிலைய நம்பர் என்பது எமக்கு பின்னர் தான் தெரிய வந்தது. பொலிஸ் நிலைய நம்பரைக் கூறி மிரட்டுபவர்களின் திமிர் தனத்தை என்னவென்று சொல்ல?  

மரக்காலை ஓனர் ஒருவர் தொடர்பில்  எமது தளத்தில் செய்தி வெளியாகியதன் பின்னரே குறித்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டே தொடர்ச்சியாக மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.   

xxxx என்கிற பெயரில் மேற்படி இலக்கத்திலிருந்து வைபர் ஊடாக, ஊடக சுதந்திரத்துக்கும், தனிநபரின் கவுரவத்துக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமைக்கான ஆதாரங்கள் உள்ளன. ஆனால், அவை தூஷண வார்த்தைகளை அதிகம் உள்ளடக்கியுள்ளதால் இங்கே எம்மால் பொதுவெளியில் பிரசுரிக்க முடியவில்லை.  

சுவிஸ் நாட்டில் உள்ள ஒருவருக்கே மேற்படி மிரட்டல் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  குறித்த கைபேசி இலக்கத்துக்கு உரிய நபரின் கைபேசி ஹிஸ்றி, தொடர்பு விபரங்களை சைபர் கிரைம் பொலிஸார் ஆராய்ந்து குறித்த பொலிஸ் நிலைய நிலையான தொலைபேசியின் இலக்கத்தினைக் கூறி கப்பம் கோரியவர்களை இலகுவாக கைது செய்ய முடியும்.  பொலிஸ் நிலைய நம்பரை துஷ்பிரயோகம் செய்து மிரட்டல் விடுத்த நபரை நாம் சரியாக   அடையாளம் காட்டியுள்ளோம். குறித்த தொலைபேசி இலக்கத்த்திலிருந்து மிரட்டல் விடுத்தவர்கள் யார் யார் என்பதனை குறித்த சிம் உபயோகிப்பாளர் மூலம் இலகுவாக அறிந்து கொள்ள முடியும். 

பொலிஸாரின் பெயரைக் கூறி தனிநபர்களோ, குழுவோ கப்பம் கோருவது, மிரட்டுவது போன்ற செயற்பாடுகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. 

இந்த செய்தி வெளியானதன் பிற்பாடு தன்னை இதுவரை அறியாத, தனக்கும் குறித்த நபருக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லாத, கடந்த ஒரு மாதமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் மீது மரக்காலை  ஓனர் பொலிஸில் புகார் செய்துள்ளார். 

முறைப்பாடு பதிவு செய்தது மட்டுமல்லாமல் இதுவரை இல்லாத பொய்யான தகவல்களை பொலிஸ் நிலையத்தில் புகாராக பதிவு செய்துள்ளமையும் தெரிய வந்துள்ளது.

மிரட்டல் விடுத்த குறித்த நபர் பேசிய விடயங்களை ஒலிப்பதிவாக அடுத்த பதிவில் வெளியிட உள்ளோம்.