யாழ்ப்பாண இளைஞர்களின் முன்மாதிரி (Photos)

யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள பாரதியார் சிலையானது வர்ணத் தீந்தைகளால் எழில் ஊட்டப்பட்டு புதுமை கவியின் பிறந்த தினத்தை (11.12.2016) கொண்டாடும் விதமாக மலர்மாலை அணிவிக்கப்பட்டு  இழந்த இயற்கையை அரவணைக்கும் வகையில் நிகழ்வில் பங்கு கொண்டவர்களுக்கும் பொது மக்களுக்கும் மரக்கன்றுகள் அப்பகுதி இளைஞர்களால் வழங்கப்பட்டுள்ளது. 

இன்றைய காலகட்டத்தில் இவ்வாறான இளைஞர்களின் செயற்பாடுகளை வரவேற்கவேண்டியது எமது கடமையாகும்.

கடந்த புரட்டாதி மாதம் யாழில் பாரதியாரின் நினைவு தினம் வித்தியாசமான முறையில் இளைஞர்களால் அனுஷ்டிக்கப்பட்டு இருந்தமையும் கவனிக்கத்தக்கது.