உழவு இயந்திரத்தில் வெடிபொருள் சிக்கி வெடித்ததில் சாரதி படுகாயம் (Photos)

கிளிநொச்சி பொன்னகர் பகுதியில் தோட்டக் காணியினை உழுது கொண்டிருந்த போது உழவு இயந்திரத்தில் வெடிபொருள் சிக்கி வெடித்ததில் அதன் சாரதி படுகாயமடைந்துள்ளார். 

இன்று பகல் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த நபர், கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். 

கல்மடுநகர் சம்புக்குளம் இராமநாதபுரத்தைச் சேர்ந்த பொன்னுத்துரை சடானந்தம் (வயது 39) என்பவரே இவ்வாறு காயமடைந்தவராவார். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.