டென்மார்க் சட்டத்துறை ஈழத்தமிழ் மாணவி மருத்துவரின் தவறான சிகிச்சையால் பரிதாப பலி (Photos)

மருத்துவரின் தவறான சிகிச்சை திறமையான மாணவி ஒருவரின் உயிரை பலிவாங்கி விட்டது. 

19 வயதான சட்டத்துறை மாணவி செல்வி. மதுரா சிவகுமார் அவர்கள் அநியாயமாக வைத்திய நிபுணரின் பொறுப்பற்ற வைத்தியமுறையினால் உயிரிழந்துள்ளார். 

செல்வி மதுரா அவர்கள் சட்டத்துறையில் மிகவும் சிறப்பு தேர்ச்சி பெற்று ஏனைய மாணவர்களைவிட திறமையான புள்ளிகளை பெற்று கல்வியில் சாதனைகளை பெற்றுக்கொண்டிருந்தவராவார். 

இவர் சற்று சுகயீனம் அடைந்த நிலையில் ஓர் வைத்திய நிபுணரின் நேரடிக்கண்காணிப்பில் இருந்தபோது வைத்திய நிபுணர் தவறுதலாக மருந்துக்கலவைகளை கொடுத்தபோது மதுரா அவர்களின் தேக ஆரோக்கியம் மிகவும் மோசமடையத்தொடங்கியதாக தெரிய வருகிறது. 

திடீரென அவர்களின் உயிர் பிரிய வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டது. துரதிஷ்டவசமாக வைத்தியசாலை நிர்வாகத்தின் கவனயீனத்தால் பறிபோன செல்வி. மதுரா சிவகுமாரின் இறுதிக்கிரியைகள் வார இறுதி நாட்களில் டென்மார்க் நாட்டில் நடைபெறும்.