ஜெயலலிதாவுக்கும் - பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையிலான உறவு (Photos)

‘நேர்மை, கீழ்படிதல், கடமை தவறாமை போன்றவற்றில் ஈடுபாட்டோடு பாதுகாப்பு அதிகாரிகள் இருக்க வேண்டும்' என்று ஜெயலலிதா எதிர்பார்த்தார். ஜெயலலிதா சாகும் வரை அவர் எதிர்பார்த்தவாறு பாதுகாப்பு அதிகாரிகள் விசுவாசப் படையணியாக இருந்துள்ளார்கள்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை இறுதியாக, அப்பல்லோவில் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சிறப்பு அறைக்கு மாற்றப்படும்போதுதான் பார்த்தோம் என்று அவரது பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி, மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்றிலிருந்து 75 நாட்கள் இரவு பகலாக அவரது பாதுகாப்பு அதிகாரிகள் அவர் சிகிச்சை பெற்றுவந்த அறைக்கு வெளியே நின்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆனால், சிகிச்சை அவர் பெற்று வந்தபோது, அந்த அறைக்குள் பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில், ஜெயலலிதா நன்றாக குணம் அடைந்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சிறப்பு அறைக்கு மாற்றப்படும்போது, அவரை சக்கர நாற்காலியில் அமரவைத்து அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அவர், தனது பாதுகாப்பு அதிகாரிகளை சைகையால் அழைத்துள்ளார். அவர்களைப் பார்த்து எப்போதும்போல் சிரித்து கையசைத்தபடி சென்றுள்ளார். அதுதான் அவரது முகத்தை தாங்கள் இறுதியாகப் பார்த்தது என்று பாதுகாப்பு அதிகாரிகள் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளனர்.

அந்த பாதுகாப்பு அதிகாரிகள் அனைவரும், ஜெ-யின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் வரை உடனிருந்து அவர்களது கடமையை செவ்வனே செய்தனர். ‘நேர்மை, கீழ்படிதல், கடமை தவறாமை போன்றவற்றில் ஈடுபாட்டோடு பாதுகாப்பு அதிகாரிகள் இருக்க வேண்டும் என்று ஜெயலலிதா எதிர்பார்த்தார். அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில்தான் நாங்கள் கடைசி வரை இருந்தோம்’ என்கிறார்கள் பாதுகாப்பு அதிகாரிகள்.