யாழ். வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளரின் பாலியல் சேட்டைகளால் திணறும் ஆசிரியர்கள்

யாழ்ப்பாணம் வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் செல்வரட்ணம்  சந்திரராஜாவின் பாலியல் சேட்டைகளால் அங்கு பணியாற்றும் பெண்கள், வலய ஆசிரியர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும்  பெண் அமைச்சர் அண்மையில் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கல்வி அமைச்சின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார். 

இவர் தொடர்பில் 2013 ஆம் ஆண்டே பாலியல் ரீதியில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட போதும் அன்று யாழில் அமைச்சராக இருந்தவர் சந்திரராஜாவைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.     அதனால், சட்ட நடவடிக்கையில் இருந்து லாவகமாக தப்பித்துக் கொண்டுள்ளார். 

அன்றும் இவர் மீதான பாலியல் குற்றச்சாட்டை நியூஜப்னா இணையமே முதன்முதலில் வெளியே கொண்டு வந்தது.

சுமார் 130 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் 2500 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு வழிகாட்டியாக உள்ள வலிகாமம் வலயக் கல்விப் பணிமனையில் இப்படியானதொரு காமப் பிசாசும் கடமை புரிகிறது. 

120 க்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்கள் கடமையாற்றும் வலிகாமம் கல்விப் பணிமனையில் 75 வீதத்துக்கும் அதிகமானோர் பெண்களே ஆவர். 

மருதனார்மடம் பிரதேசத்தின் மாகாணக் கல்வித் திணைக்களத்தின் கீழ் தளத்தில் தான் வலிகாமம் வலயக் கல்விப் பணிமனை இயங்கி வருகிறது.  

சந்திரராஜா கடமையேற்றதும் முதல் செய்த வேலை தான் இருக்கும் அலுவலக அறையை சுற்றி கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டியது தான். உள்ளே எது நடந்தாலும் வெளியே தெரியாமல் தான் இந்த ஏற்பாடாம். செக்குருட்டி கூட இவரது அறைக்குள் அடிக்கடி செல்ல முடியாதாம். இவரை சந்திக்க வெளியே இருந்து வருபவர்கள் கூட இவரது அறைக்கு வெளியே காத்திருக்க முடியாதாம். அப்படி கடுமையான பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்து வைத்திருக்கிறார் சந்திரராஜா. அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மத்தியில் பொதுவாக தான் மிக கடுமையானவர் என்பதனை அடிக்கடி நிரூபிப்பதிலும் வல்லவராம். 

குறித்த நபர் மீதான நடவடிக்கையை துரிதப்படுத்தி, இவரை கல்விச் சமூகத்தின் அரங்கிலிருந்தே அப்புறப்படுத்த வேண்டும் என அண்மையில் இலங்கை ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் சுட்டிக் காட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது. 

சிறிய அலுவலகத் தேவைக்கு கூட செல்லும் பெண்களிடம் பின்னால் தட்டி விடுவதும், பாலியல் கிண்டல் ஜோக்கடிப்பதும் தான் இவரது முழுநேரத் தொழில். 

வலிகாமம் வலயக் கல்வி ஊழியர்கள், வலய பாடசாலைகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இடமாற்றம், விடுமுறை, பதவிஉயர்வு போன்றவற்றின் போது பாலியல் இலஞ்சம் கோருவது தான் சந்திரராஜாவின் ஸ்டைல். 

மறுக்கும் ஆசிரியர்கள், பெண் ஊழியர்களின் வேலைகளை கடுமையாக இழுத்தடித்து அவர்களை மன வேதனைக்கு உள்ளாக்கி விடுவாராம்.  

ஆசிரியர்களின் எதிர்காலத்தையே பாழாக்கிவிடும் இந்தப் பிசாசை உடனடியாக வலயப் பணிமனையிலிருந்து கலைப்பது மட்டுமல்லாமல், இவருக்கு உரிய தண்டனையினை பெற்றுக் கொடுக்க வேண்டும். 

இவரால் கடும் வேதனையை அனுபவித்த ஆசிரியர்களும், ஊழியர்களும் குடும்ப கவுரவத்துக்கு பயந்தே இவர் மீதான குற்றச்சாட்டுக்களை  வெளியே பகிரங்கமாக கூற தயங்குகின்றனர். 

கல்விச் சமூகத்துக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டியவர்கள் இப்படியாக பாலியல் பிசாசாக இருப்பது, நாளை மாணவர்களின் எதிர்காலத்தை எங்கே கொண்டு செல்லப் போகின்றது என்பதே அனைவரதும் கேள்வியாகும். 

யாழ்ப்பாண நீதிமன்றம் இவ்விடயத்தில் நேரடியாக தலையிட்டு  பாதிக்கப்பட்ட பெண்களிடம் ரகசிய விசாரணை நடாத்தி  இவர் மீதான நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் என்பதே வலிக்காம கல்வி வலய கல்விச் சமூகத்தினரின் பணிவான கோரிக்கையாகும். 

சந்திரராஜா மீதான அதிரடி நடவடிக்கைகளை துரிதப்படுத்தாமல் வடக்கு மாகாண முதலமைச்சரும், வடக்கு கல்வி அமைச்சரும் இந்த விடயத்தில் ஏன் பாரா முகமாக இருக்கின்றனர் என கல்விச் சமூகத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.