தனித்துப் பயணிக்கும் புதுமைப் பெண் (Video)

இந்தியாவில் பெண்கள் தனியாக சுற்றுலா செல்லும் போக்கு தற்போது அதிகரித்து வருகிறது. அவ்வாறு ஒற்றையாய் பயணித்து சுற்றுலா செல்லும் ஒரு புதுமைப் பெண் தான் சென்னையை சேர்ந்த கவிப்பிரியா மூர்த்தி. 27 வயதாகும் அவர் பொறியியல் மற்றும் எம்பிஏ பட்டதாரி.

தனியாக பயணித்து சுற்றுலா செல்வது நம்மை பற்றி நாம் அறிந்துகொள்வதற்கு உதவும் என்கிறார் இளம் எழுத்தாளருமான இவர்.

தனியாகப் பயணிக்கும் பெண்கள் பல சவால்களை எதிர்கொள்ளலாம். ஆனால் அவற்றை தைரியமாகவும் மன உறுதியுடனும் கையாண்டால் எந்த பிரச்சினையையும் சமாளிக்கலாம் என்கிறார் கவிப்பிரியா. 

(வீடியோ கட்டுரை தயாரிப்பு சங்கீதா ராஜன் மற்றும் ஜெயக்குமார்)

BBC-