பனை அபிவிருத்திச்சபையில் பாரிய ஊழல் மோசடி! 60 மில்லியன் ரூபாய்கள் பணத்தை ஆட்டையப் போட்ட ஐவர்! (Photos)

இலங்கை போக்குவரத்துச்சபை, இலங்கை மின்சாரசபை, இலங்கை அபிவிருத்தி லொத்தர் சபை, இலங்கை முதலீட்டுச்சபை, இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச்சபை, இலங்கை தேயிலை சபை, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை, தேசிய கால்நடை அபிவிருத்திச்சபை, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபை என்று நாட்டுக்குள் சபைகள் பல இருந்தாலும், ‘இலங்கை பனை அபிவிருத்தி சபை’ ஒன்றே தமிழர்கள் ஆளும் ஒரே சபையாகும். 

அதாவது ‘இலங்கை பனை அபிவிருத்தி சபை’யின் தலைவர் பதவிக்கு காலம் காலமாக தமிழ் இனத்தை சேர்ந்தவர்களே நியமிக்கப்பட்டு வந்துள்ளனர். இந்த அருமை பெருமை இனிவரும் ஆண்டு காலங்களுக்கும் தொடர வேண்டும். 

குறிப்பாக இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் தமிழ்மொழி பேசும் மக்களின் தேசிய வாழ்வின் தனித்துவ அடையாளமாக கற்பகத்தருக்கள் (பனை மரங்கள்) மிளிர்கின்றன. 

இத்தகைய சிறப்பை உடைய பனை மரங்கள் ஈய்ந்து கொடுக்கும் மூலப்பொருட்களிலிருந்து பெறப்படும் உற்பத்தி பொருட்களை விற்று, தமது நாளாந்த வயிற்றுப்பிழைப்பை கொண்டு நடத்தும் தொழிலாளர் குடும்பங்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பல ஆயிரக்கணக்கில் சீவித்து வருகின்றன. இவர்களின் பனை சார்ந்த உற்பத்தி பொருட்கள் கைத்தொழிலை ‘குடிசைக்கைத்தொழில்’ என்றே பலரும் விளித்துக்கூறி வருகின்றனர். 

அதற்கு காரணங்கள் இல்லாமலும் இல்லை. உண்மை தான், சாதாரண ஏழை எளிய அடித்தட்டு (கீழ் வர்க்கம்) மக்களே, இந்த குடிசைக்கைத்தொழிலை நம்பி அதில் ஈடுபட்டு, ஒட்டுமொத்த இனத்தின் தேசிய அடையாளத்தையும் வீழ்ந்து விடாமல் தூக்கித் தாங்கிப் பிடித்து நிலைநிறுத்தி வருகின்றனர் என்பதை நினைக்கும் போது கண்களின் ஓரம் எல்லாம் நீர் கட்டுகிறது. 

‘மரம் போனால் மழை போய்ச்சு’ என்பார்கள். அதுபோலவே ‘பனை போனால் தமிழர் வாழ்வின் அடையாளமும் போய்ச்சு’.  

எத்தனையோ கை நிறைய பணம் சம்பாதிக்கும் தொழில்கள் இருந்தும் கூட, இன்றும் கூட தமிழர் மரபை தொலைக்க விடாமல் காப்பாற்றி வரும், பனையை நம்பிச்சீவித்து வரும் இந்த குடும்பங்களுக்கு நாங்கள் எல்லோரும் கடமைப்பட்டவர்களே. கடல் கடந்து - கண்டம் பாய்ந்து நாங்கள் நமது சுயத்தை - தனித்துவ அடையாளத்தை தொலைத்த பின்னும், சொந்த நிலத்தில் இறுக கால் ஊன்றி அவற்றை மீட்டெடுத்து தரும் இந்த குடும்பங்களுக்கு நாங்கள் எப்போதும் பரிவாகவும், அனுசரணையாகவும் இருத்தல் வேண்டும். இது நமது ஒவ்வொருவரதும் தேசியக்கடமை.

இப்படி மாபெரும் தேசியப்பணியை ஆரவாரமில்லாமல் செய்து வரும் இந்த ஏழை எளிய அடித்தட்டு (கீழ் வர்க்கம்) மக்களின் வாழ்க்கைத்தர முன்னேற்றத்துக்கும், தொழில் விருத்திக்கும் ஒதுக்கப்பட்ட பணத்தை ‘லபக்கிய  - ஆட்டையப்போட்ட’ ஊழல் பெருஞ்சாலிகளை, நாயிலும் கீழான அடிமைப்புத்தியுடைய இந்த ஈனப்பிறவிகளை என்ன தான் செய்வது? 

வடக்கு மாகாணத்தில் நெல்சிப் திட்டத்தில் இடம்பெற்ற நிதி ஊழல்களை வெளிக்கொணர சகல ஊடகங்களும் ஆற்றிய பெரும் பணியை இதற்கும் கூட்டாக செய்தாக வேண்டும். பனை சார்ந்த ‘குடிசைக்கைத்தொழிலை’ நம்பிச்சீவித்து வரும் குடும்பங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதியை பெற்றுக்கொடுத்தாக வேண்டும். சமுக வலைப்பதிவர்கள் எல்லோரும் இந்த குடும்பங்களுக்கு ஆதரவாக பலம் சேர்க்க வேண்டும். 

நிதி ஊழல் மோசடியில் ஈடுபட்டுள்ளவர்கள்:

லோகநாதன் (பொதுமுகாமையாளர்)

சுதாகரன் (நிர்வாக முகாமையாளர்)

கோபாலகிருஸ்ணன் (விரிவாக்கல் பிரிவு முகாமையாளர்)

திருமதி ஜெனார்த்தனன் (அபிவிருத்தி முகாமையாளர்)

தேவராஜன் (கணக்காளர்) 

இவர்கள் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அரசியல் செல்வாக்கை கொண்டுள்ளவர்கள். டக்ளஸ் சிறுகைத்தொழில் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் 2013 முதல் 2015 வரையான ஆண்டுக்குள்ளேயே இந்த 60 மில்லியன் ரூபாய்கள் நிதி ஊழல் மோசடியில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். 

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் இந்த பாரிய ஊழல்கள் தொடர்பில் ஏலவே நாடாளுமன்றத்தில் உரையாற்றி நாடாளுமன்ற கோப் (நம்பிக்கை) குழுவுக்கு பாரப்படுத்தியிருந்தார். இலங்கை பனை அபிவிருத்திச்சபையிடம் கோப் குழுவும் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரியிருந்தது. 

இலங்கை பனை அபிவிருத்திச்சபையின் தற்போதைய தலைவர் வைத்தியகலாநிதி சிவசங்கர் அவர்களே! 

அந்த அறிக்கைக்கு என்ன நடந்தது? அறிக்கை கோப் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதா? நீங்கள் ஏன் கமுக்கமாக இருக்கின்றீர்கள்? உங்களுக்கும் இந்த பாரிய ஊழல் மோசடிகளில் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா? அல்லது ஊழல் மோசடியை ஆதரித்து அனுசரித்துப் போய்விடலாம் என்ற மனநோயா? இல்லை ஆயுதக்குழுவான ஈ.பி.டி.பி உங்களை மிரட்டுகின்றதா? அன்றி வேறு ஏதேனும் கொழும்பின் உயர்மட்ட அரசியல் அழுத்தங்களா? 

உண்மைகள் வெளியே வந்தாக வேண்டும். பனை சார்ந்த ‘குடிசைக்கைத்தொழிலை’ நம்பிச்சீவித்து வரும் குடும்பங்களுக்கு நீதி கிடைக்கும் வரை எமது எழுதுகருவிகள் ஓயப்போவதில்லை.

வெளிப்படத்தன்மையுடன் நீதி விசாரணைகள் நடத்தப்பட்டு, மோசடியாக இவர்கள் ஐவரும் சம்பாதித்த மொத்த பணத்தையும் குற்றப்பணத்துடன் சேர்த்து வட்டியாக மீளவும் அறவிடப்படல் வேண்டும். அதுமட்டுமல்லாமல் பதவி இறக்கம் அன்றி பதவி குறைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லாமல் இவர்கள் ஐவரதும் பதவிகள் பறிக்கப்பட்டு வீட்டுக்கு கலைக்கப்படல் வேண்டும். அதுவே பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கப்படும் மெய்யான நீதியாக கொள்ளப்படும். 

நன்றி: கவரிமான்