சர்வா எனும் வைரஸ் அங்கஜனுக்கு தொற்றி வயிற்றுப் போக்கு - ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ரத்து

இன்று தென்மராட்சி பிரதேச மக்களின் நலன்களுக்காக ஒழுங்கு செய்யப்பட்ட ஒருங்கிணைப்பு அபிவிருத்திக் கூட்டம் அங்கஜனுக்கு ஏற்பட்ட வயிற்றுளைவு காரணமாக பிற் போடப்பட்டுள்ளது.

குறித்த அபிவிருத்திக் கூட்டம் விஜயகலா மற்றும் அங்கஜன் கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஆகியோர் தலைமையில் இடம்பெற இருந்தது. இருப்பினும் இக் கூட்டத்திற்கு விஜயகலா செல்லாது தனது பிரதிநிதியாக சாவகச்சேரி கட்சி அமைப்பாளர் சர்வாவை அக் கூட்டத்திற்கு அனுப்பினார்.

இதனை அறிந்த யாழ் மாவட்ட சுதந்திரக்கட்சியைச் சேர்ந்த தேசியப்பட்டியல் எம்.பியான அங்கஜன் இக் கூட்டத்தை தடுத்து நிறுத்துவதற்காக ஒரு காரணத்தைத் தேடிப்பிடித்தார். கூட்டத்தை நிறுத்த முயன்றது ஏனெனின், சர்வாவும் அங்கஜனும் பரம விரோதிகள் என்பதே. ஏற்கனவே கீரியும் பாம்புமாக பலதடவைகள் மோதி அதன் காரணமாக அங்கஜனின் தந்தை நீதிமன்றில் அலைந்து திரிந்து கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

சர்வாவுடன் சேர்ந்து ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தை நடாத்துவதற்கு அங்கஜன் விரும்பவில்லை. உடனடியாக பிரதேச செயலாளரைத் தொடர்பு கொண்டு தனக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டிருக்கின்றது, கூட்டத்தை நிறுத்தி இன்னொரு நாளுக்கு நடாத்துங்கள் என கூறியுள்ளார். இதனால் கூட்டம் ரத்தாகியது.

இதனால் பெருமளவு வேலை விரையம், பண விரையம் போன்றவற்றுடன்  கூட்டத்திற்கு வந்த மக்களின் துன்பத்தையும் பொருட்படுத்தாது இவ்வாறான சில்லறைத் தனங்களால் மக்களின் மனத்தில் இப்படிப் பட்டவர்கள் இடம் பிடிக்க மாட்டார்கள் என்பது வெளிப்படை உண்மை.