இறந்து விட்டாரா பேஸ்புக் நிறுவனர்?

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜீக்கர்பெர்க் இறந்துவிட்டதாக அவரது பக்கத்தில் தவறான தகவல் வெளியானது.

இதுகுறித்து பேஸ்புக் நிறுவன செய்தி தொடர்பாளர் கூறுகையில், இறந்தவர்களின் பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய தகவல் தவறுதலாக உயிரோடு இருக்கும் பலரது பக்கத்தில் பதிவேற்றிவிட்டோம். சிறிது நேரத்திற்கு பின்னர் நிலைமை சரிசெய்யப்பட்டு விட்டது என தெரிவித்துள்ளார்.

மார்க் ஜீக்கர்பெர்க் மட்டுமல்ல, இன்னும் 20 லட்சம் பேருக்கு அவர்கள் இறந்துவிட்டதாக இன்று பேஸ்புக் பதிவேற்றியது குறிப்பிடத்தக்கது.