விஜயகலாவிடம் வாங்கிகட்டிய அரச ஆண் அதிகாரிகள்

யாழ் மாவட்ட முதல் தமிழ் பெண் ஜக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சருமான கெளரவ திருமதி விஐயகலா மகேஸ்வரன் அன்று இருந்திருந்தால் ஆறுமுகநாவலர் தற்கொலை செய்திருக்க வேண்டும். 

சைவ உலகில் பெரும் மனிதராக கருதப்படும் ஆறுமுக நாவலர் கூறியதை இந்த இடத்தில் இன்று 30.01.2016 மனங் கொள்ளலாம்.

1931 இல் பெண்களுக்கு வாக்குரிமை வழங்குவதை அன்றைய பெரும் தலைவரான பொன்னம்பலம் இராமநாதன் எதிர்த்ததையும் இங்கு குறித்து கொள்வோம்.

இது பற்றி டொனமூர் சாட்சியத்தில் இராமநாதன் கூறிய கருத்துக்கள் மிகவும் புகழ் பெற்றவை “நீங்கள் எங்கள் பெண்களை அவர்கள்பாட்டில் இருக்க விடுங்கள். கடவுளின் விருப்பப்படி அவர்கள் இந்த உலகத்தில் கீழானவர்களாக உள்ளமை எதற்காக என்பது பற்றி நீங்கள் அறிய நியாயமில்லை. 

பெண்களின் முழு வாழ்க்கையும் கவனமும் வீட்டிலேயே இருக்க வேண்டும் அதற்கப்பாலான உலகமில்லை. வீட்டுப் பொறுப்பிற்கப்பால் அவர்கள் செல்வதற்கு இடம் கொடுக்கக் கூடாது.” நாவலர், இராமநாதன் ஆகியோரின் கூற்றிலிருந்து பெண்கள் குறித்த அன்றைய தமிழர் சமூக கண்ணோட்டம் எத்தகையது என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடியும்.

இத்தகையதொரு பின்புலத்தில், யாழ்பாணத்தில் உருவாகிய படித்த பெண்கள் தமது சயாதீனத்திற்காக குரல் கொடுப்பதுடன்தான், நமது சூழலில் பெண்களது அரசியல் பிரவேசம் நிகழ்கின்றது. 1920 களில் உருவாகிய யாழ் வாலிபர் காங்கிரஸ் பெண்களின் விடுதலை உணர்விற்கு களமமைத்த முக்கிய அரசியல் இயக்கமாக விளங்கியது.

எந்தவொரு மாற்றமும் தானாக தோன்றுவதில்லை. சகல மாற்றங்களும் அதற்கான தேவையிலிருந்தும், புறச்சூழலிலிருந்துமே தோன்றுகின்றன.

தமிழர் விடுதலைப் போராட்டத்தை முன்னிறுத்தி, தமிழ் தேசியமும் பெண் விடுதலையும்

குமாரி ஜெயவர்த்தனாவின் ‘தேசியமும் மூன்றாமுலக பெண்களின் விடுதலையும்’ என்னும் நூலில்  இந்தியா, துருக்கி, ஈரான், எகிப்து போன்ற முன்றாமுலக நாடுகளின் போராட்டங்கள், பெண்விடுலையில் ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்து பேசியிருக்கும் குமாரி, கண்முன்னிருக்கும் ஒரு வர்க்க அரசியலை முன்னிறுத்தி சிந்திக்கும் குமாரிக்கு தமிழ் பெண்களின் புரட்சிகர தலையீடு பற்றி விவாதிப்பது கடினமாக இருந்திருக்கலாம். 

சிறிலங்காவின் பிரபல பெண்ணிய ஆய்வாளர் கலாநிதி நெலூபர் டி.மெல் “தமிழரின் போராட்டம் தமிழ் பெண்களுக்கு சமூக விடுதலையைப் பெற்றுக் கொடுக்கவில்லை, ஆண் பற்றாக்குறையை ஈடு செய்வதற்காகவே பெண்கள் போராட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். போராட்டம் நடக்கும் வரை பெண்களுக்கு வெளிப்படையான அந்தஸ்த்து வழங்கப்படுகின்றது அதன் பின்னர் அவர்கள் முன்னைய குறுகிய வட்டத்தினுள் தள்ளப்படுவார்கள்” என்று வாதிடும் நெலுபர், ஒரு கொழும்பு மையவாத சிங்கள ஆய்வாளராவார். 

ஈழத் தமிழர் சமூகத்தின் அகநிலை விடுதலைத் தேவைகள் சார்ந்து விவாதித்தவர்களில் பெரும்பாலானோர் தமது கருத்தின் உள்ளடக்கமாக புலி எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்டிருந்தார்களேயன்றி, பெண்களின் விடுதலைத் தேவையின் மீதான அக்கறையையல்ல. 

தமிழ்த் தேசியம் என்பது ஒரு இனத்துவ நிலை தேசியம் என்பதை தெளிவாக குறித்துக் கொள்வோம். உண்மையில் தமிழ் தேசியத்திற்கும் பெண்விடுதலைக்கும் இடையிலான உறவென்பது முழுமைக்கும் பகுதிக்கும் இடையிலான உறவாகும். 

பெண்விடுதலை நமக்கு முக்கியமான ஒன்றுதான். சமூக மட்டத்தில் பெண்கள் மீதான சகல ஒடுக்குமுறைகளுமற்ற ஒரு தேசத்தையே நாம் அவாவி நிற்கிறோம் ஆனால் அதற்கு முதலில் தமிழர்கள் உயிர்வாழ்ந்தாக வேண்டும். 

தமிழர் வரலாற்றைப் பொறுத்தவரையில் இது ஒரு முக்கிய புரட்சிகர மாற்றமாகும். இதிலுள்ள துரதிஸ்டம் என்னவென்றால், எப்பொழுதுமே தமக்கு வெளியில் எதுவுமே இல்லையென்று எண்ணும் சில எழுத்தாளர்கள், புலமையாளர்கள் இந்த விடயத்திலும் தமது கையறு நிலைக்கு விளக்கங்களை புனைந்து வருகின்றனர்.

தமிழர் தேசிய அரசியலானது உள்ளடக்கதிலும், அதன் போராட்ட வடிவத்திலும் படிமுறை சார்ந்த மாற்றங்களூடாக நகர்ந்த ஒன்றாகும். ஆரம்பத்தில் 50:50 என்ற கோரிக்கையிலிருந்து, பின்னர் சமஸ்டிக் கோரிக்கையாக மாற்றமடைந்து இறுதியில் தனியான அரசை ஸ்தாபித்தல் என்ற உயர்ந்த வடிவத்தை பெற்றது. 

இந்த படிமுறைசார்ந்த வளர்ச்சிப் போக்கில்; பெண்களின் அரசியல் தலையீடும் காலத்திற்கு காலம் நிகழ்ந்தே வந்திருக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்தினதும் அரசியல் எழுச்சியின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப அவர்களது பிரசண்ணம் நிகழ்ந்திருக்கிறது. இதனை புலிகளுக்கு முன்னர் புலிகளுக்கு பின்னர் என பிரித்து நோக்கலாம். 

குறிப்பாக ஆங்கிலேய கல்விமுறையானது, அதுவரை கல்வியில் புறக்கணிப்பட்டிருந்த பெண்களுக்கு புதியதொரு பார்வையை வழங்கியது. கல்வி கற்ற பெண்களது எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்க, கூடவே சமூக மட்டத்தில் அவர்களது நடமாட்டமும் பன்முக விடயங்களில் அவர்களது தலையீடும் அதிகரித்தது.

அதன் நீட்சியாக, 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் அதிகளவில் கல்வி கற்ற பெண்கள் உருவாகினர்.