வாட்ஸ்ஆப்பில் சீக்ரெட் மெசேஜ் அனுப்புவது இப்படி தான்!

வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் போது நீங்கள் உங்கள் ப்ரைவஸி (தனியுரிமை) பற்றி கவலை கொள்கிறீர்களா..? உங்கள் பெர்சனல் சாட்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதை உனக்கிலை தவிர வேறு யாராலும் புரிந்துகொள்ள இயலாது.

நீங்கள் சாதாரணமாக சாட் செய்யலாம் ஆனால் உங்கள் நண்பர் மட்டுமே உங்கள் தனிப்பட்ட உரையாடல்களை காண முடியும் வண்ணம் சீக்ரெட் மெசேஜ் அனுப்ப முடியும் என்று கூறினால் நம்புவீர்களா..?

அப்படி நடந்தால் அது தான் ஆன்லைன் நடவடிக்கைகளில் உள்ள இறுதிகட்ட பாதுகாப்பாக திகழும் அல்லவா..? அதை நிகழ்த்த உங்கள் பாதுகாப்பை பலப்படுத்த கிபோ ஆப்தனை இன்ஸ்டால் செய்தால் போதும்..!

கிபோ பற்றிய தகவல்கள் துப்பறியும் கண்களிடம் இருந்து உங்கள் தனிப்பட்ட மெசேஜ்களை பாதுகாக்கப்பட உருவாக்கப்பட்ட ஆப் தான் – கிபோ.

பேஸ்புக் மெசேன்ஜர், ஸ்கைப் போன்ற பிற உடனடி செய்தி சேவைகளுக்கு ஒரு இரகசிய சாட் தனை உருவாக்க அனுமதிக்கும் கீபோர்ட் தான் கிபோ ஆப். கிபோ ப்ரொடக்ஷன் மூலம் நீங்கள் முன்னமைக்கப்பட்ட சொற்றொடர்களை கொண்டு உண்மையான செய்திகளை மறைக்க முடியும்.

எனினும், இந்த ஆப் ஆனது ஐபோன்களில் மட்டுமே கிடைக்கும். நீங்கள் ஆப்பிள் ஐடியூன்ஸ்-ல் இருந்து இந்த பயன்பாட்டை பெற முடியும். இதை பயன்படுத்துவது எப்படி..?