மொபைல் டேட்டாவை மீதப்படுத்த யூ -டியூப் அறிமுகப்படுத்தும் புது வழி!

மொபைலில்  நாம் வழக்கமாக  பார்க்கும் வலைதள பக்கங்களுக்கு செலவிடும் டேட்டாக்களை விட நாம் பார்க்கும்    வீடியோக்களிற்கே   அதிக  டேட்டாக்கள்  பயன்படுத்தப்படுகின்றன.

இதனை தடுக்கும் பொருட்டு  ஆண்டிராய்டு பயனர்களுக்கு யூ-டியூப் Smart offline  என்ற  ஒரு புது சலுகையை வழங்கியுள்ளது.

அதாவது  நாம்  பார்க்க எண்ணும் வீடியோக்களை  டேட்டாக்கள் மலிவான தரத்தில் கிடைக்கும் நேரங்களான இரவில் சேமித்து காலையில் Saved vedios ல் கொண்டு வந்து சேர்க்கிறது.

இதனால் பகலில்  நாம் குறித்து வைக்கும் வீடியோக்கள் இரவில் டேட்டாவை மிச்சப்படுத்தும் பொருட்டு தக்க சமயத்தில் தானாகவே பதிவிறக்கி தரும்.

இந்த அம்சம் இன்று முதல் ஏர்டெல் மற்றும் டெலினார் போன்ற நெட்வொர்க்குகளுக்கு மட்டுமே கிடைக்கும். வெகுவிரைவில் அனைத்து நெட்வொர்க்குகளிலும் காணலாம் என கூகுள் நிறுவனத்தினர் கூறியுள்ளனர்.

Smart offline    அம்சத்தினை மொபைலில் கடைபிடிக்க  வழிமுறைகள் இதோ …

படி 1:

முதலில் யூ -டியூபில் நாம் offline ல் பார்க்க வேண்டிய வீடியோவை தேர்ந்தெடுத்து அதில்  “Save Over night ” ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.

படி 2:

பின்னர் குறித்து வைத்த வீடியோவானது   இரவில் தானாகவே பதிவிறக்கம் செய்யும்.

படி 3:

இறுதியாக சேமித்த வீடியோக்களை  நமது அக்கவுண்டில் saved vedios பக்கத்தில் சென்று பார்த்து ரசிக்கலாம்.