போரால் பாதிப்புக்குள்ளான விசுவமடுவில் சிறுவர் கூட்டுறவு அபிவிருத்தி சங்கம் உதயமானது (Photos)

கிளிநொச்சி மாவட்டத்தின்  விசுவமடு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் அனுசரனையுடன் RAHAMA நிறுவனத்தின் ஏற்பாட்டில் யுத்த அனர்த்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட புதுக்குடியிருப்பு விசுவமடு பிரதேசத்தில் கடந்த முதலாம்  திகதி  அன்று விசுவமடு மகா வித்தியாலய பாடசாலை  மண்டபத்தில் இடம்பெற்றது. 

ரஹமா நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில், வாழ்வாதார திட்டத்தின் ஓர் அங்கமான சிறுவர் அபிவிருத்தியை முன்நோக்கிய ஒரு விடயமாக சிறுவர்களை அங்கத்துவமாக கொண்ட ஓர் சிறுவர் கூட்டுறவு அபிவிருத்தி சங்கம் இந் நிகழ்வில் அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது உரையாற்றிய விசுவமடு பலநோக்கு கூட்டுறவு சங்க பொது முகாமையாளர்,

தங்கள் ஸ்தாபனமானது ரஹமா நிறுவன வழிகாட்டலில் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியிருப்பதை குறிப்பிட்டு நெற் களஞ்சியம், குடிநீர் விநியோகம் மற்றும் தேங்காய்எண்ணை உற்பத்தி போன்ற திட்டங்களை முன்னெடுக்கும் அதே வேளை இப்பிரதேசத்திலுள்ள சிறார்களின் நலன்களை கருத்திற் கொண்டு இவ்வாறான சிறுவர் கூட்டுறவு அபிவிருத்தி சங்கம் உருவாக்கப்படுவதன் மூலம் எதிர் காலத்திலே திறமையான ஒரு கூட்டுறவு மனித வளத்தினை கூட்டுறவுத் துறை மூலம் உருவாக்கலாம் என்று குறிப்பிட்டார்.

இதன் போது தலைமை உரையாற்றிய ரஹமா நிறுவனத்தின் இணைப்பாளர், 

எமது நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் ஓர் நிரந்தரமான மாற்றத்தை ஏற்படுத்த கூடியதும், மது போதையற்ற ஓர் சமுதாயத்தை உருவாக்குவதையும் இலக்காக கொண்டு செயற்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டார்.

இந் நிகழ்வில் சிறுவர் சார் செயற்றிட்டங்களை செயற்படுத்தும் அரச அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள், பொலிஸ் சிறுவர் மகளிர் பிரிவு பொறுப்பதிகாரி, கூட்டுறவு ஆணையாளர், பாடசாலை அதிபர்கள், கிராம மட்ட அமைப்பின் பிரதிநிதிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட 225 பங்குபற்றுனர்கள் கலந்து கொண்டதுடன் சிறார்களின் கலை கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு இடம் பெயர்ந்து மீள்குடியேறிய தமிழ், முஸ்லீம் சிறார்கள் கலந்து கொண்டமை சமூக ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தியது சிறப்பம்சமாகும்.