உறங்க நினைத்தாலும் உறக்கம் வராது

சில சமயங்களில் ஒரு குறிப்பிட்ட விஷயம் நம்மை சூழ்ந்துகொள்ளும்... சிறிதும் அகலாமல் நம்மை முற்றுகையிட்டுகொள்ளும்....

அதிலிருந்து விடுபடவே முடியாது..தவிர்க்க எண்ணினாலும் அதுவே முன்னனியில் வந்து நிற்கும்... உறங்க நினைத்தாலும் உறக்கம் வராது..

சிறிது கண்ணயர்ந்தாலும் கனவாக அதே நினைவுகள் வாட்டிவதைக்கும்....

உள்ளுக்குள் ஒரு போராட்டமே நடக்கும்... இதனை உதறுவது அத்தனை சுலபமல்ல... மன உறுதிக்கு ஏற்பட்ட ஒரு சவாலாகவே இருக்கும்...

குடும்பம்..அலுவலக பொறுப்புகள்.. நோய்கள்.. நியாயம்.. சுகாதாரம்... காதல் விவகாரம்... பாலியல் பிரச்சனைகள்....

இந்த மாதிரியான காரணங்களால் அந்த மாதிரியான விடுபட இயலாத சூழல்கள் ஏற்டலாம்....

என்ன காரணத்தினால் என்பது தெளிவாக தெரியும்போது... படிப்படியாக அதிலிருந்து மீளவேண்டும்... அதுவரை நிதானத்தை கடைபிடிப்பது அவசியம்...

இயன்றால் மனதை ஒருமுகப்படுத்தி பயிற்சி செய்தலும்.. பாரமில்லாத சுலபமான மனதிற்கு பிடித்த வேலையை நிதானமாக செய்துகொண்டிருப்பதும் நலம்....

மனதிற்கு பிடித்த நம்பிக்கையானவர்களோடு பொழுதுபோக்காக பேசிகொண்டிருக்கலாம்.. குறிப்பிட்ட காரணத்தை பற்றி பேசுவதை தவிர்த்தல் அவசியம்....

எதுவுமே முடியவில்லையென்றால்... உடனடியாக எங்காவது கண்களுக்கு இனிமையான மனதை ஆற்றுபடுத்தகூடிய குளிர்ச்சியான.. மலைவாசஸ்தலங்களுக்கு ஓரிரு நாட்கள் மட்டும் ஓரே ஓட்டமாக ஓடிவிடுதல் மாற்றத்தை தரும்

செல்வி அருள்மொழி...... மனநல ஆலோசகர்