இன்னும் 10 வருடத்தில் 17 லட்சம் சேமிக்கனுமா? வாங்க பார்க்கலாம்.

வரவுக்கேற்றவாறு இருக்கப் பிடித்து செலவு செய்து லட்சங்களை எப்படி சேமிப்பது என்று குழப்பதில் இருக்கிறீர்களா?இதில் சில குறிப்புகள் ஒன்று இரண்டு ரூபாய்களை சேமிக்கக் கூடியதாக கூட இருக்கலாம் ஆனால் சில வருடத்திற்குப் பிறகு பல ஆயிரங்களை சேமிக்கக் கூடியதாக இருக்கும். இதோ உங்களுக்கான மாதம் 9,000 ரூபாய் முதல் நாளுக்கு 300 ரூபாய் வரை சேமிப்பதற்கான குறிப்புகள்.

மின்சாரத்தை எப்படிச் சேமிப்பது?

குளிர்சாதனப் பெட்டி சுற்றி காற்று எளிதாக வந்து போகக் கூடிய இடமாக அமைக்கவும்.நேரடியாகச் சூரிய வெளிச்சம் படக்கூடிய இடங்களைத் தவிர்க்கவும்.ஃபிரிட்ஜ் முழுவதும் எப்போதும் நிரப்பியும், ஐஸ் கட்டிகளை எப்போது நீக்கவும் வேண்டாம்.ஏர் கண்டிஷ்னரின் வெளிப் புறத்தை வெயிலில் படாதவாறு அமைக்கவும். ஃபில்ட்டர்களை சுத்தமாக வைத்துக் கொள்க.ஏசி பயன்படுத்தும் போது அறைகளின் கதவுகள் மற்றும் திரை சீலைகளை மூடிவிடவும்.

மின் விசிறி, கணினி போன்ற எலெக்ட்ரிக், எலக்ட்ரானிக் சாதனங்கள் பயன்பாடு இல்லை என்னும் போது அனைத்து விடவும். இதனால் 50 சதவீதம் வரை உங்கள் மின்சார கட்டணத்தை குறைக்கலாம்.ஏசியின் அளவீட்டை 22-இல் வைப்பதற்குப் பதிலாக 25 ஆக வைப்பதன் மூலம் 5 சதவீதம் வரை உங்கள் மின்சார பயன்பாட்டை சேமிக்கலாம்.நீர் கொதிகலனின் வெப்ப அளவைக் குறைப்பதன் மூலம் 15 சதவீதம் வரை மின்சார பயன்பாட்டை குறைக்கலாம்,இதன் மூலம் மாதம் 500 ரூபாய் வரை நீங்கள் சேமிக்கலாம்.

போக்குவரத்து செலவுகளை எப்படி குறைப்பது?

குறைந்தது வாரத்திற்கு ஒரு முறையாவது பொது துறை போக்குவரத்து, கார் பகிர்தல்(pooling) போன்றவற்றைப் பயன்படுத்துங்கள்.உகந்த டயர் அழுத்தத்தைப் பராமரிக்கவும், கீயர் மாற்றுவதை குறைக்கவும், காரில் உள்ள குப்பைகளை நீக்கவும் மற்றும் போக்குவரத்து சிக்னல்களில் இருக்கும் போது வாகனத்தை அனைத்து வைக்கவும்.பொதுத்துறை போக்குவரத்தை நீங்கள் பயன்படுத்தும் போது 800 ரூபாயும், எரிவாயு சேமிக்கும் குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம் 500 ரூபாயும் என மொத்தம் 1,300 ரூபாய் வரை சேமிக்கலாம்.

மளிகை பொருட்கள் செலவுகளை எப்படி குறைப்பது?

பழங்கள், காய் கரிகள் போன்றவற்றைப் பல்பொருள் அங்காடிகள் மற்றும் ரோட்டுக் கடைகளில் வாங்குவதை விட வாரச் சந்தைகளில் வாங்குங்கள், இங்கு வாங்குவதன் மூலம் 10 முதல் 12 சதவீதம் வரை சேமிக்கலாம்.கெட்டுப்போகாத பொருட்களை மொத்தமாக வாங்கி வைத்துக்கொள்ளவும். இதன் மூலம் 10 முதல் 12 சதவீதம் வரை சேமிக்கலாம்.உதிரியாக வாங்குவதை விடக் கிலோவாக சில மளிகை பொருட்களை வாங்குவதன் மூலம் 7 முதல் 10 ரூபாய் வரை சேமிக்கலாம்.அதிக விலை உள்ள பிறாண்டு பொருட்களை வாங்குவதை விட நீங்கள் வாங்கும் ஸ்டோர்களின் பிறாண்டு பொருட்களை வாங்குவதன் மூலம் 20 முதல் 100 ரூபாய் வரை சேமிக்கலாம்.இந்தப் படிகளை நீங்கள் கடைப்பிடிப்பதன் மூலம் மாதம் 1,000 முதல் 8,000 வரை சேமிக்கலாம்.

தேவை இல்லாத செலவுகளை குறைப்பது எப்படி?

வேலை செய்யும் இடங்களில் வழங்கும் உணவுகளுக்கு ஏதும் கட்டணங்கள் செலுத்த வேண்டும் என்றால் அதைத் தவிர்க்கவும்.புகைப் பழக்கத்தை விட்டுவிடுங்கள் அல்லது சிக்ரெட்கள் பிடிக்கும் எண்ணிக்கையை குறைத்துக் கொள்ளுங்கள்.அடைத்து வைத்து விற்கப்படும் குடிநீர் மற்றும் தேநீர் அருந்துவது போன்றவற்றை தவிர்ப்பதினால் 20 ரூபாய் மிச்சப்படுத்தலாம்.வீட்டில் இருந்து உணவு எடுத்துச் செல்வதனால் 70 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை சேமிக்கலாம்.மேலே உள்ளக் குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் மாதம் 3,000 வரை சேமிக்கலாம்.

பொழுதுபோக்கு செலவுகளை எப்படி குறைப்பது?

வெளியில் சென்று உணவை உண்பதை விடச் சலுகைகள் உள்ள சில செயலிகளைப் பயன்படுத்தி வீட்டிற்கே உணவை வரவழைத்து உன்னலாம்.வெளியில் செல்லும் போது குளிர் பானங்கள் அருந்துவதைவிட வீட்டிற்கு வாங்கி வந்து அருந்தலாம்.வார இறுதி நாட்களில் சினிமா பார்க்கச் செல்வதைவிட வார நாட்களில் செல்வதினால் 150 ரூபாய் வரை ட்க்கெட் விலை வேறுபாட்டைக் காணலாம்.மேலே உள்ளக் குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் மாதம் 2,000 ரூபாய் வரை சேமிக்கலாம்.

தகவல்தொடர்பு செலவுகளை குறைப்பது எப்படி?

குழந்தைகளுக்கு ப்ரீப்பெய்ட் மொபைல் இணைப்புகளையும், பெரியவர்களுக்கு போஸ்ட்பெய்ட் இணைப்புகளையும் பயன்படுத்தலாம்.வெளிநாட்டு அழைப்புகளுக்கு ஸ்கைப் மற்றும் வாட்ஸ் அப் போன்ற செயலிகளைப் பயன்படுத்தலாம்.வீட்டில் இணைய இணைப்பை வைத்திருக்கிறீர்கள் என்றால் தேவைக்கேற்ப அளவான திட்டங்களை பயன்படுத்தவும்.இவற்றை நீங்கள் பின்பற்றுவதினால் மாதம் 300 ரூபாய் வரை மிச்சப்படுத்தலாம்.

சரியாக கட்டணம் செலுத்துதல்

சலுகைகள், கேஷ் பேக் போன்றவற்றைப் பெற மின்னணு வாலாட்டுகளை பயன்படுத்தவும்.மொபைல், டிடிஎச் ரீசார்ஜ்கள், மொபைல் கட்டணங்கள் போன்றவற்றை மின்னணு வாலாட்டுகள் மூலம் செலுத்தலாம். இதே பொன்று டாக்ஸி திரைப்பட டிக்கெட், ஹோட்டல் புக்கிங் போன்றவற்றையும் மின்னணு வாலாட்டுகள் மூலம் பெறலாம்.போஸ்ட்பெய்ட், கிரிடிட் கார்டு கட்டணங்களை சரியான நேரத்தில் செலுத்தி அபராத கட்டணங்களை தவிர்க்கலாம்.இவற்றைச் செய்வதினால் மாதம் 600 ரூபாய் வரை சேமிக்கலாம்.

10 வருடத்தில் 17 லட்சம்இப்படி உங்களால் மாதம் 9,000 ரூபாய் மிச்சப்படுத்த முடியும் என்றால் இதனை 9 சதவீதம் வரை லாபம் அளிக்கும் முதலீடு திட்டங்களில் சேமித்து வைத்தால் 5 வருடத்தில் 6.8 லட்சமாகவும், 10 வருடத்தில் 17 லட்சமாகவும், 15 வருடத்தில் 33 லட்சம் ரூபாயாகவும் லாபம் பெறலாம்.