சோனி எரிக்சன் Xperia XZ மாடலின் புதுமை பற்றி தெரியுமா?

ஸ்மார்ட்போன் சந்தையில் பல முன்னணி நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க முடியாமல் திணறி வரும் ஜப்பானின் சோனி நிறுவனம், மீண்டும் தனது மார்க்கெட்டை நிலைநிறுத்த x சீரியஸ் புதிய மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது.

சோனி Xperia XZ என்ற மாடலில் அப்படி என்ன புதுமைகள் உள்ளது என்பதை பார்ப்போம்,
என்ன மெட்டீரியலில் செய்யப்பட்டது தெரியுமா? சந்தையில் வலுவாக காலூன்ற வேண்டும் என்பதற்காக இந்த புதிய சோனி Xperia XZ மாடலில் ALKALEIDO என்ற மெட்டீரியலில் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் 146 x 72 x 8.1 mm அளவிலும் 161 கிராம் எடையும் கொண்டது. ஸ்கீர்ன் எப்படி இருக்கும்? சோனி Xperia XZ மாடலில் ஸ்க்ரீன்5.2-inch Full HD TRILUMINOS டிஸ்ப்ளே கொண்டது.

இதனால் படங்களும் வீடியோவும் மிகத்தெளிவாக தெரியும்.

லேட்டஸ்ட் சிப்செட் இதன் பலம்:

சோனி Xperia XZ மாடலில் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 820 SoC, உடன் X12 LTE பிராஸசர் உள்ளது.

இதனால் கனெக்டிவிட்டி, கிராபிக்ஸ், பவர், மற்றும் பேட்டரி சூப்பராக இயங்கும். மேலும் இந்த ஸ்மார்டோன் Adreno 530 GPU உள்ளதால் கேம் விளையாடுபவர்களின் நண்பனாக இருக்கும். ஸ்டோரேஜ் எப்படிங்க இருக்கும்?

சோனி Xperia XZ மாடலில் 3GB ரேம் 32GB இண்டர்னல் ஸ்டோரேஜ் வசதியும் 200GB வரை மெமரி கார்டு போடும் வசதியும் உண்டு.

வித்தை செய்யும் விதத்தில் கேமிரா: சோனியின் சாதாரண போனிலேயே கேமிரா சூப்பராக இருக்கும் நிலையில் இதில் எப்படி இருக்கும் என்பதை சொல்லவே தேவையில்லை.

23MP பின்கேமிரா மற்றும் 13MP செல்பி கேமிரா இதில் உள்ளது. மிகச்சரியாக ஃபோகஸ் செய்யும் டெக்னாலஜி இந்த கேமிராக்களில் அடங்கியுள்ளது.

f டிரிபிள் இமேஜ் சென்சிங் டெக்னாலஜி:

சோனி Xperia XZ மாடலில் டிரிபிள் இமேஜ் சென்சிங் டெக்னாலஜி டெக்னாலஜி இருப்பதால் படமெடுக்க வேண்டிய இமேஜை சரியாக கால்குலேட் செய்து மிகத்துல்லியமாக ஃபோகஸ் செய்யும் வேறு என்ன புதுமை இருக்குது?

இந்த ஸ்மார்ட்போனில் ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டெபிலிசேஷன் இல்லை என்றாலும் அதற்கு இணையான இண்டலிஜெண்ட் ஆக்டிவ் மோட் மற்றும் 5ஆக்சிஸ் ஜிராஸ்கோப் இருப்பதால் படமும் வீடியோவும் பார்ப்பதில் புது பரவசம் அளிக்கும் அபார தன்மையுடன் கூடிய செல்பி கேமிரா:

சோனி Xperia XZ மாடலில் 13எம்பி செல்பி கேமிரா உள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த கேமிராவில் 1/3.06″ லோ லைட் சென்சார் இருப்பதால் இருளிலும் தெளிவாக படமெடுக்கும். மேலும் 4K வீடியோ சப்போர்ட் செய்யும் தன்மையும் இதற்கு உண்டு.

தண்ணீரில் விழுந்தால் என்ன ஆகும்? இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 6.0 Marshmallow அமைந்துள்ளது. மேலும் வாட்டார் ரெசிஸ்டெண்ட் பக்காவாக உள்ளதால் தைரியமாக தண்ணீரில் போடலாம்.

சார்ஜ், பேட்டரி எப்படி? சோனி Xperia XZ மாடலில் 2,900mAh பேட்டரியும் விரைவாக சார்ஜ் செய்ய உதவும் 3.0 டெக்னாலஜி உள்ளது. ஒருசில நிமிடங்களில் 100% விரைவாக சார்ஜ் செய்யும் தன்மை இதற்கு உண்டு.