பேஸ்புக் பயனாளிகளுக்கு ஓர் எச்சரிக்கை

பேஸ்புக் வலைத்தளத்தில் தற்போது புதிய வடிவில் வைரஸ் ஒன்று பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வைரஸானது பேஸ்புக்கில் காணொளி இணைப்பை தமது டைம்லைனில் பகிர்ந்துள்ளதாக அறிவிப்பு செய்துள்ள நிலையில், அந்த அறிவிப்பினை கிளிக் செய்யும் போது உங்கள் பேஸ்புக் கணக்கில் ஊடாக குறித்த வைரஸ் பரவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் குறித்த வைரஸினால் ஏற்படும் பாதிப்பு தொடர்பில் இதுவரை உத்தியோகப்பூர்வமாக தெரியவரவில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, எவ்வித புதிய லிங்க் (டink) உங்களது பேஸ்புக் பக்கத்திற்கு பகிரப்பட்டிருந்தாலும் அது தொடர்பில் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பேஸ்புக்கில் வரும் வீடியோ காணொளிகளை திறந்து பார்ப்பதை கூடுமானவரை தவிர்த்து கொள்வது சிறந்தது என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.