காம்பீருக்கு நோ: நியூசிலாந்துக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு

நியூசிலாந்து அணியுடன் மோதவுள்ள டெஸ்ட் போட்டிக்கான இந்திய வீரர்களை பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள நியூசிலாந்து அணி 3 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இதில் நியூசிலாந்து அணியுடன் மோதவுள்ள 3 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் வீரர்களை பிசிசிஐ அறிவித்துள்ளது.

இதில் தற்போது நடைபெற்று வரும் துலீப் டிராபி தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் காம்பீர் இடம் பெறுவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இலங்கை, தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்திய தீவு அணிகளில் சிறப்பாக செயல்பட்டு தொடரை வெற்றி பெறுவதற்கு உதவிய அதே வீரர்களே தற்போதும் இடம் பெற்றுள்ளனர்.

விராட் கோஹ்லி(அணித்தலைவர்), ரகானே, அஷ்வின், ஷிகர் தவான், ரவீந்தர் ஜடேஜா, புவனேஷ்குமார், அமித் மிஸ்ரா, முகம்மது சமி, புஜாரா, கே.எல்.ராகுல், சஹா, இஷாந்த் சர்மா, ரோகித் சர்மா, முரளி விஜய், உமேஷ் யாதவ்.

இவ்விரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் 22 ஆம் திகதி இந்தூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற உள்ளது.