மகனின் கண் முன்னே தாயை சீரழித்த காமுகன்!

பெங்களூரை சேர்ந்த சித்ரா என்ற 23 வயதான பெண்ணை அவருடன் பணிபுரிந்து வந்த விவேகானந்தா என்பவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவம் சித்ராவின் ஒரு வயது பையன் கண் முன்னே நடந்துள்ளது.

பெங்களூரு எலகங்கா கோகிலு கிராஸ் பகுதியை சேர்ந்த சித்ரா அந்த பகுதியில் உள்ள கட்டுமான பொருட்கள் விற்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு அந்த நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த விவேகானந்த என்பவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.

இந்நிலையில் பணி ரீதியாக இருவரும் வெளியூர் பயணம் மேற்கொண்ட போது, சித்ரா குளிப்பதை ஆபாசமாக படம் பிடித்து அதனை காட்டி மிரட்டி தனது ஆசைக்கு இணங்க மிரட்டியுள்ளார் விவேகானந்தா.

வேறு வழியில்லாமல் சித்ரா பயத்தில் தன் மகன் கண் முன்னே விவகானந்தாவின் இச்சைக்கு சம்மதித்தார். அத்தோடு விட்டுவிடாமல் விவேகானந்தா அந்த வீடியோவை மீண்டும் மீண்டும் காட்டி பலமுறை சித்ராவை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளான்.

தன்னுடைய பாலியல் தேவைக்காகவே தனியாக ஒரு வீடு எடுத்து அங்கே சித்ராவை தங்க வைத்தார் விவேகானந்தா. இந்த விவகாரம் சித்ராவின் கணவருக்கு தெரியவர அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தலைமறைவாக உள்ள விவேகானந்தாவை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.