சென்னை கல்லூரி மாணவிகளுடன் கும்மாளம் போட்ட பிராவோ!

மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆல் ரவுண்டர் பிராவோ சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியவர். இவருக்கு சென்னை மிகவும் பரிட்சியமான ஊரே. இந்நிலையில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிராவோ மாணவிகளுடன் நடனமாடினார்.

தமிழகத்தில் நடைபெற்று வரும் டி.என்.பி.எல். போட்டிகளை பிரபலப்படுத்த ஆஸ்திரேலியாவின் பிரட் லீ, ஹைடன், வெஸ்ட் இண்டீசின் பிராவோ, கெயில் ஆகியோர் சென்னை வந்துள்ளனர். கிரிக்கெட் வீரர்கள் பிரட் லீ மற்றும் ஹைடன் ஆகியோர் வேஷ்டி சட்டையில் வந்து ரசிகர்களை உற்சாக்கப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிராவோ கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பிராவோ கல்லூரி மாணவிகளுடன் அசத்தலாக நடனமாடி கலக்கினார்.