2 படகுகள் வாங்குமாறு காம்பீருக்கு வேண்டுகோள் விடுத்த சேவாக்: எதற்காக?

டெல்லியில் பெய்து வரும் கனமழை காரணமாக பொதுமக்கள் அனைவரும் படகில் தான் பயணிக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் வீரர்களான சேவாக் மற்றும் காம்பீர் நகைச்சுவையாக கருத்து தெரிவித்துள்ளனர்.

தற்போது இந்தியா வந்த அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் டெல்லி மழை குறித்து, ஐஐடி நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களை பார்த்து நீங்கள் அனைவரும் இங்கு வருவதற்கு படகு தேவைப்பட்டிருக்கும் என கிண்டலாக கூறினார்.