சாம்பியன் பட்டம் வென்றது சிவன் விளையாட்டுக்கழகம்

சாவகச்சேரி றிபேக்தாரகை நடத்திய துடுப்பாட்டப் போட்டியின் இறுதிப் போட்டி அண்மையில் மட்டுவில் மோகனதாஸ் விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்றது.

சாவகச்சேரி சிவன் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து நுணாவில் பாரதி விளையாட்டுக்கழகம் மோதியது.

நாணயச் சுழற்சியன் மூலம் முதலில் களத்தடுப்பை தெரிவு செய்த பாரதி விளையாட்டுக்கழகம் சிவன் அணியின் பந்து வீச்சினை எதிர்கொள்ள முடியாது 28 ஓட்டங்களில் இலக்கை இழந்தது.

தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய சிவன் விளையாட்டுக்கழகம் 4 இலக்குகளை இழந்து 6 விக்கெட்டுகளில் சாம்பியன் கிண்ணத்தினை தனதாக்கக் கொண்டது.

தீபன் ஆட்டநாயகனாகவும் ஜெனி தொடர் ஆட்ட நாயகனாகவும் சிறந்த பந்து வீச்சாளராக சுசியும் தெரிவு செய்யப்பட்டனர். பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட பேராசிரியர் க.கந்தசாமி வீரர்களைக் கெளரவித்தார்.