நாளை சிங்கப்பூர் செல்கிறார் ரணில்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்து சமுத்திர கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக நாளை சிங்கப்பூருக்குப் பயணமாகவுள்ளார்.

இந்து சமுத்திர கலந்துரையாடல்-2016 சிங்கப்பூரில் உள்ள சங்கிரி லா விடுதியில் நாளை, செப்ரெம்பர் 1ஆம் நாள் தொடங்கி, இரண்டு நாட்கள் இடம்பெறவுள்ளது.

இந்த மாநாட்டில் மலேசியாவின் பிரதிப் பிரதமர், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், மற்றும் சிங்ககப்பூர், பங்களாதேஸ் வெளிவிவகார அமைச்சர்கள், உள்ளிட்ட இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் செழிப்புத் தொடர்பாக ஆராயும் இந்த மாநாட்டில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பங்கேற்று உரையாற்றவுள்ளார்.