முஸ்லிம்களுக்கு நிர்வாக அதிகார சபை…!!

முஸ்லிம்களுக்கு நிர்வாக அதிகார சபையை வழங்குவதில் தமிழர்களுக்கு ஆட்சேபணை இருக்க முடியாது என்கிறார் விக்கி

கிழக்கில் பெருவாரியாக வெளியார் குடியேற்றங்கள் நடைபெற்ற போது தமது குரல் கொடுத்திருக்கலாம். இவ்வாறான குடியேற்றங்களைக் குறைத்திருக்கலாம். இக் குடியேற்றங்களினால் எமக்கு ஏற்பட்ட பாதிப்பை நாங்கள் தணிப்பது என்றால் வடகிழக்கு இணைப்பு அவசியம். முஸ்லிம் மக்களுக்கு ஒரு நிர்வாக அதிகார சபையை வழங்குவதில் தமிழ் மக்களுக்கு எந்த ஆட்சேபணையும் இருக்க முடியாது என்று வடக்கு முதல்வரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவருமான சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.

ஆனால் வடக்குக் கிழக்கு இணைந்த தமிழ்ப் பேசும் அலகு என்பது எமது வருங்கால ஒற்றுமைக்கும், தமிழ்ப் பாரம்பரிய நிரந்தரத்திற்கும் மிக்க அவசியமான ஒன்றாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.