மாமியாரை காதலித்து திருமணம் செய்த மருமகன்!

பீகாரில் இளைஞர் ஒருவர் தன்னுடைய மாமியாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பாக பேசப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சூரஜ் என்பவருக்கும் லலிதா என்பவருக்கும் திருமணம் நடந்தது. சில தினங்களுக்கு பின்னர் சூரஜுக்கு உடல்நலம் சரி இல்லாமல் போக தனது மருமகனை பார்த்துக்கொள்ள லலிதாவின் தாய் ஆஷா தேவி அவர்கள் வீட்டிற்கு சென்றுள்ளார்.

ஆஷா தேவியின் கணவர் டெல்லியில் பணி புரிவதால், மருமகன் சூரஜும், மாமியார் ஆஷா தேவியும் அடிக்கடி வெளியில் சந்தித்து வந்துள்ளனர். இந்த சந்திப்புகள் காதலாக மாறி திருமணம் செய்து, சேர்ந்து வாழ மாமியாரும், மருமகனும் கடந்த ஜூன் மாதம் ஊரை விட்டு ஓடியுள்ளனர்.

பின்னர் தங்கள் சொந்த கிராமத்திற்கு வந்த அவர்கள் ஊர் பஞ்சாயத்தில் சேர்ந்து வாழ அனுமதி வாங்கி தற்போது சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். மருமகனின் வயது 22, மாமியாரின் வயது 42 என்பது குறிப்பிடத்தக்கது.